மறைந்துள்ள மர்மங்கள்: விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் 12 விசித்திர உயிரினங்கள்!

Strange creatures
Strange creatures
Published on

லகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் பலவற்றை மனிதன் இன்னும் கண்டறியவில்லை. கண்டுபிடிக்கப்படாதவை இன்னும் நிறையவே உள்ளன. ஆனால், விஞ்ஞானிகளின் ஆய்வுகள் மூலம் சில விசித்திரமான, நாம் அடிக்கடி காணாத உயிரினங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அப்படிப்பட்ட சில உயிரினங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஆக்சலாட்டில் (Axolotl): இது, ‘மெக்சிகன் நடக்கும் மீன்’ என்று அழைக்கப்படுகிறது. தவளையின் போலியாக தோற்றமளிக்கும் நீர்வாழ் உயிரி. கைகள், கால்கள் உடைந்து போனால் மீண்டும் வளர்த்துக்கொள்ளும் அற்புதத் திறன் கொண்டது. எப்போதும் குட்டி நிலையில்தான் (larval stage) இது வாழ்கிறது.

2. கிரிஸ்டல் ஜெல்லி (Crystal Jelly fish): கடலில் வெளிப்படையாகத் தோன்றும் ஜெல்லி மீன். அதன் உடலில் green fluorescent protein (GFP) உள்ளது. இந்தப் புரதம் மருத்துவம் மற்றும் மரபணு ஆய்வுகளில் பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பல நிறங்களில் கண்கள்; தப்பிப்பதில் கில்லாடிகள்... யார் இவர்கள்?
Strange creatures

3. கிளாஸ் தவளை (Glass Frog): இதன் வயிற்றுப் பகுதி முழுவதும் வெளிப்படையாக இருக்கும். இதனால் இதன் உள்ளுறுப்புகளை நேரடியாகக் காண முடியும். பெரும்பாலும், மத்திய மற்றும் தென் அமெரிக்க மழைக்காடுகளில் இவை வாழ்கின்றன.

4. ஸ்டார்-நோஸ் மோல் (Star-nosed Mole): வட அமெரிக்காவில் காணப்படும் சிறிய வகை நிலச்சுழி விலங்கு இது. இதன் மூக்கில் நட்சத்திரம் போல 22 சிறிய முடிச்சுகள் இருக்கும். மிக வேகமாக உணவைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்ட உயிரினம் இது (120 மில்லி வினாடியில் உணவைச் சாப்பிடும்!).

5. யெட்டி கிராப் (Yeti Crab): 2005ல் தென் பசிபிக் கடலில் இது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை நிறத்தில், ‘மயிர் போன்ற’ நகம் கொண்ட நண்டு. அதன் நகங்களில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. அவற்றை உணவாக உண்ணுகிறது.

6. துரிடோப்சிஸ் டோஹ்ர்னி (Turritopsis dohrnii): ‘அமரா ஜெல்லி மீன்’ (Immortal Jellyfish) என அழைக்கப்படுகிறது. வயது முதிர்ந்த பின்னும் தனது உடலை மீண்டும் குட்டி நிலையில் மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. அறிவியலாளர்களுக்கு ‘மரணத்தை வெல்லும் உயிரினம்’ என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
வௌவால்: ஓர் இரவு நேரப் பறவையா, விலங்கா?
Strange creatures

7. ஆயி-ஆயி (Aye-Aye): மடகஸ்கர் தீவில் வாழும் விசித்திரக் குரங்கு வகை இது. நீளமான நடுவிரல் கொண்டு மரத்தில் பூச்சிகளை எடுத்து உண்ணும். உள்ளூர் மக்களால் ‘தீய சின்னம்’ என்று கருதப்படுகிறது.

8. மெகா மவுத் ஷார்க் (Megamouth Shark): 1976ல் முதன் முதலில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அரிதாகவே இது காணப்படுகிறது. ஆனால், இன்னும் பல இதன் உறவின இனங்கள் கண்டறியப்படாமல் கடலின் ஆழத்தில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

9. கோஸ்ட் ஷார்க் (Ghost Shark / Chimaera): மீன்களுக்கும் சுறாக்களுக்கும் இடைப்பட்ட ஒரு பழங்கால உயிரினக் குழுவைச் சேர்ந்தது இது. சுமார் 400 மில்லியன் ஆண்டுகளாக இவை வாழ்கின்றன. இவற்றில் இன்னும் பல வகைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

10. ஆழ்கடல் ‘கல் போல’ மீன்கள்: சில சமயங்களில் மீனவர்கள் விசித்திரமான கல்லைப் போல தோன்றும் உயிரிகளைப் பிடித்துள்ளனர். அவை பெரும்பாலும் வகைப்படுத்தப்படாத புதிய இனங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
சவால்களைத் தாண்டி சாதனையாக மாறிய கனவு: எத்தியோப்பியாவின் GERD அணை திறப்பு!
Strange creatures

11. ஆழ்கடல் ஜாம்பி புழுக்கள் (Zombie Worms / Osedax): இறந்த திமிங்கல எலும்புகளுக்குள் வாழும் புழுக்கள் இவை. 2000ல் முதன் முதலில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இன்னும் பல வகைகள் ஆழ்கடலில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

12. மைக்ரோ உயிரினங்கள் (Microbes): பனிக்கட்டிகளிலும் எரிமலைக் குகைகளிலும் அண்டார்டிகா பனிக்கட்டிகளின் கீழ், ஆழமான எரிமலைக் குகைகளில் வித்தியாசமான சில நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவை இன்னும் பெரும்பாலும் கண்டறியப்படாத உயிரினங்கள் என்று கருதப்படுகின்றன.

உலகின் கடல் பகுதியின் சுமார் 80 சதவிகிதம் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதால், ஆயிரக்கணக்கான விசித்திரமான உயிரினங்கள் இன்னும் மனிதக் கண்களால் காணப்படாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com