ஆற்றல்மிகு குளிர்கால உலர் பழம் பேரீச்சையின் ஆரோக்கிய குணங்கள்!

Health benefits of dates
Health benefits of dates
Published on

குளிர்காலம் தொடங்கும்போது, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக, வைரஸ்களால் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம். பேரீச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் உணவில் பேரீச்சம் பழங்களைச் சேர்ப்பது, உங்கள் உடலின் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனை மேம்படுத்துகிறது. அதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் மேம்படுத்துகிறது.

குளிர்காலத்தில் நமது உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. பேரீச்சை பழத்தில் குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் செறிந்து காணப்படுகின்றன. இது இரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கும் தொழிலை செய்கின்றது. போதிய நார்ச்சத்து இல்லாமல் உண்ணும் உணவுகள் மூலம் ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்க பேரீச்சம்பழம் உதவுகிறது.

பொதுவாக, குளிர்காலத்தில் இதயம் இயங்க அதிகமான ஆற்றல் தேவை. பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக அமைகிறது. கூடுதலாக, பேரீச்சம் பழங்களில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன. அவை இதயம் தொடர்பான பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

குளிர்காலத்தில் எலும்புகளின் பலம் குறையும். பேரீச்சம்பழம் வைட்டமின் Kன் மூலத்தை வழங்குகிறது. இது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மூட்டு வலியால் அவதிப்படுவோர் மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. பேரீச்சம் பழத்தில் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. பேரீச்சம் பழங்களைத் தவறாமல் உட்கொள்வது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பை ஆதரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும். பேரீச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் கே உள்ளடக்கம் புதிய எலும்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது. இதனால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்னைகள் நீங்குகின்றன.

பொதுவாக, குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடுகள் ஏற்படும். அதனால் மலச்சிக்கல் ஏற்படும். பேரீச்சம் பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்யும். இதில் கணிசமான நார்ச்சத்து உள்ளதால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பேரீச்சம் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கவும் உதவுகிறது. பேரீச்சம் பழங்களைத் தவறாமல் உட்கொள்வது செரிமான அமைப்பைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் பங்களிக்கும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளி, செம்பு பாத்திரங்களின் ஆரோக்கிய குணம் தெரியுமா?
Health benefits of dates

குளிர்காலத்தில் சீரான இரத்த ஓட்டம் தேவை. அதற்கு இரும்புச்சத்து அவசியம். ஒவ்வொரு பேரீச்சம் பழத்திலும் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இனிப்பு சாப்பிடும் ஆசை ஏற்பட்டால் தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழம் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது. 100 கிராம் பேரீச்சம் பழத்தில் 0.9 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், மூன்று அல்லது நான்கு பேரீச்சம் பழங்களை நீரில் ஊறவைத்து, அதனை மறுநாள் காலை சாப்பிடுவதால், இரத்த சோகை குணமாகும்.

பேரீச்சம் பழத்தில் மெக்னீசியம் காணப்படுகின்றது. இதோடு, டிரிப்டோபான் என்ற அமினோ அமில மூலக்கூறும் உள்ளது. இவை குளிர் காலத்தில் நல்ல தூக்கத்திற்கு அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேலும், தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன் பேரீச்சம் பழங்களை சாப்பிட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com