ஆண்களே! சும்மா அசால்டா இருக்காதீங்க! இந்த அறிகுறிகள் அபாயமானவை!

Symptoms of Men
health for Men
Published on

பொதுவாக நோய்கள் வெளியே தெரிவது வலிகள், சுவாச சிரமம், காய்ச்சல் மற்றும் சோர்வு மூலமாகத் தான். இதில் சில நேரங்களில் அது சாதாரணமாக இருக்கும். சில தீவிரத்தை காட்டுவதாக இருக்கும். இந்நிலையில் சில அறிகுறிகளை ஆண்கள் அசால்டாக எடுத்துக் கொள்ள கூடாது என்கிறார்கள். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்...

நெஞ்சு வலி: பொதுவாக இதயநோய் சம்பந்தமானது தான் நெஞ்சுவலி. ஆனால், அது சில நேரங்களில் வேறு சில உடல் நலப் பிரச்னைகள் மூலமாகவும் வரலாம் என்கிறார்கள். நிமோனியா, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் கூட சில நேரங்களில் நெஞ்சு வலியை உருவாக்கும். அல்சர் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளின் அறிகுறியாகவும் நெஞ்சு வலி வரலாம். வாயு கோளாறுகள் கூட நெஞ்சு வலி மாதிரி தெரியும். இந்த மாதிரி வேளைகளில் தொடர்ந்து கடுமையான நெஞ்சு வலி என்றால் அசால்டாக இருக்கக் கூடாது.

இதயத்திற்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள் குறுகிப்போய், ரத்தம் செல்வது குறைந்தால், இதயத்தில் வலி ஏற்படும். இதனை 'ஆஞ்ஜைனா' என்கிறார்கள். இது இதயத்தைப் பிழிவது போன்றும், இறுக்கமாகவும் இருக்கும். மார்பு கூடுக்குள் எரிச்சல் ஏற்படும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இது தொடரும். இந்த மாதிரி நிலையில் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மூச்சு விடுதலில் சிரமம்: அடிக்கடி மூச்சு விடுதலில் சிரமம் என்றால் அது இதய நோயின் அறிகுறிதான். அதே வேளையில் நுரையீரல் பிரச்சினைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய், COPD நோய்கள் மற்றும் அனிமீயாவும் கூட சில நேரங்களில் மூச்சு விடுதலில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நெஞ்சு எரிச்சல்: அதிகப்படியாக சாப்பிட்டால் அல்லது காரமான உணவுகள் சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சல் தோன்றும். இது பொதுவாக பலருக்கு ஏற்படும். ஆனால் இந்த நெஞ்சு எரிச்சல் உணர்வு மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் அது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் இங்கிலாந்து பப்ளிக் ஹெல்த் மைய ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: நன்மைகள், சிக்கல்கள் மற்றும் சவால்கள்!
Symptoms of Men

களைப்பு: பொதுவாக எந்த வேலையும் செய்தவுடன் ஆற்றல் குறைபாடு காரணமாக களைப்பு ஏற்படும். ஆனால், சில நேரங்களில் இது மன அழுத்தம், தூக்கமின்மை, இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் சில உடல் நலக்கோளாறுகள் காரணமாக கூட களைப்பு ஏற்படும். இது தொடர்ந்து இருந்து வந்தால் அசால்டாக இருக்கக் கூடாது. அதிக வேலை செய்யாமல் மிகவும் சோர்வாக உணர்ந்தால், நாள் முழுவதும் சக்தி இல்லாமல் இருந்தால், அது கல்லீரல் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.

கொழுப்பு கல்லீரல் காரணமாக, உடலின் நச்சு நீக்க செயல்முறை குறைகிறது. வளர்சிதை மாற்றம் பலவீனமடைகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்று அர்த்தம்.

மன அழுத்தம்: இது வருவதற்கு பல காரணங்கள் உண்டு. மன அழுத்தம் அவ்வப்போது வந்தால் பிரச்னை இல்லை. அதுவே தொடர்ந்து இருந்து வந்தால் அசால்டாக இருக்கக் கூடாது. அது எதனால் வருகிறது என்று கண்டறிந்து உடனே சரி செய்ய வேண்டும்.

ஞாபக மறதி: பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை ஞாபக மறதி. பொதுவாக வேலை டென்ஷன் காரணமாக மறதி ஏற்படும். ஆனால், அதுவே தொடர்ந்து இருந்து வந்தால் சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதையும் படியுங்கள்:
உணவை விழுங்க கூட தெரியவில்லையா? இதுதான் கடைசி நிலை!
Symptoms of Men

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் நெருக்கடி: பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் அளவைப் பொறுத்து சிறுநீர் கழிக்கும் அவசியம் ஏற்படும். உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது எந்த விதமான சிரமமும் இருக்காது. அதுவே குறையும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது இயல்பை விட சிரமம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த மாதிரி நேரத்தில் அசால்டாக இருக்கக் கூடாது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com