மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆரோக்கிய டிப்ஸ்..!

Rainy season tips
health care tipsImage credit - practo.com
Published on

ழைக்காலம் ஆரம்பிக்க இருக்கும் இந்நேரத்தில் சில தற்காப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த நோய்களிலிருந்து, இடர்பாடுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மழை பெய்யும்போது வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி குப்பை, மற்ற கழிவுகளை அகற்ற வேண்டும். சன்ஷேட், மாடி வடிகால் ஓட்டை, பைப்புகளில் அடைப்பில்லாமல் சரிசெய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் ஒழுகுவது, சாரல் அடிப்பது இருந்தால் சரிசெய்து கொள்ள வேண்டும். மழை என்றாலே சாலையில் தங்கியிருக்கும் தண்ணீர்தான் பிரச்னை. அதை மிதித்துக்கொண்டு வருவதால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முடியும். தேங்கியிருக்கும் தண்ணீரில் எலியின் சிறுநீர், சாக்கடை கழிவுகள் சேரும் என்பதால் நடக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். வெளியில் சென்று விட்டு வந்ததுமே கை, கால்களை நன்றாக கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்ல நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகளை தடுத்து விடலாம்.

டைபாய்டு, ஸ்வைன்ஃப்ளூ என பல பெயர்களில் காய்ச்சல் வந்து நம்மை கஷ்டப்படுத்திவிடும். கொசுக்களால் வரும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டையும், சுற்றிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

டெங்கு என்றால் உடலில் வலி, முதுகுவலி, கண்ணுக்கு பின்னால் வலி, வயிற்று குமட்டல், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடரும். டெங்கு அறிகுறிகள் தெரிந்தவுடன்  மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சுயமருத்துவம் கூடாது‌.

காய்ச்சலோடு முகம், கழுத்துப் பகுதி தோலில் தடிப்புகள், மூட்டு இணைப்புகளில் வலி போன்றவை சிக்குன் குனியாவின் அறிகுறிகள். சாதாரண காய்ச்சல் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது. குளிர்ச்சியான உணவுகளை உண்ணாமல், பிரெஷ்ஷான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பற்களில் இருந்து ரத்தக் கசிவு, உடல் வறட்சி, மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள். பரிசோதனை செய்து அதன்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். டெங்கு, ஸ்வைன் ஃ ப்ளூ காய்ச்சலுக்கு மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனதை வென்றவர்களே மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்!
Rainy season tips

கொசுவலை கொசு விரட்டி உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு டைபாய்டு காமாலை போன்றவற்றிக்கு தடுப்பசி போட்டுக்கொள்ள வேண்டும். முதியோர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருக்கும். அவர்களையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை முதியோருக்கும் போட்டுவிட நோய்களிலிருந்து அவர்களை பாதுகாத்திடலாம். நிமோனியா தடுப்பூசியை முதியோருக்கு 5வருடங்களுக்கு ஒருமுறை போட்டு விடுவது நல்லது.

சளி, இருமல் வராமல் இருக்க காய்ச்சி ஆறிய குடிநீரையே அனைவரும் உபயோகிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கூடாது. பெரியோருக்கும் உடல் நலக்குறைவு எனில் அதை சரியாக்கிக் கொண்டு பின்னர் அலுவலகம் செல்ல அவர்கள் நலம் பாதுகாப்பதுடன் அடுத்தவருக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கும்.

கைவசம் மருந்துகள், சிரப் போன்றவற்றை வைத்துகொள்ள எமர்ஜென்சி சமயத்தில் கைகொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com