சப்ஜா விதைகள் என்றழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை என்பது துளசி வகையை சார்ந்ததாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரிய பங்கு வகிக்கிறது.
இந்த திருநீற்றுப்பச்சிலையின் பூக்கள் வெள்ளை நிறத்திலும், இதன் விதைகள் இனிப்பு சுவையிலும் இருக்கும். இதன் செடிகள் கார்ப்பு சுவையை கொண்டிருக்கும்.
சப்ஜா விதைகள் என்றழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை என்பது துளசி வகையை சார்ந்ததாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரிய பங்கு வகிக்கிறது.
இந்த திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் இனிப்பு சுவையில் இருக்கும். இதன் செடிகள் கார்ப்பு சுவையை கொண்டிருக்கும்.
சளி, இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு திருநீற்றுப்பச்சிலை மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், சளியை வெளியேற்றும் மற்றும் அழற்சிக்கு எதிரான (Anti-inflammatory) பண்புகளைக் கொண்டுள்ளன.
இந்த இலை வாந்தி, கபநோய்களை குணப்படுத்தும் என்று அகத்திய முனிவர் கூறியிருக்கிறார்.
உடல் ரீதியான ஆரோக்கியம்:
1. இதன் இலைகளை மென்று சாப்பிடுவது அல்லது தேநீரில் சேர்த்து அருந்துவது செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது. வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.
2. திருநீற்றுப்பச்சிலை சாறு, காய்ச்சலின்போது ஏற்படும் உடல் வலியைப் போக்கவும், நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடவும் உடலுக்கு பலம் அளிக்கிறது.
3. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, அடிக்கடி வரும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
4. உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி, சிறுநீர் எரிச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைத் தீர்க்கும்.
5. குளிக்கும்போது அரைமணி நேரத்திற்கு முன்பே இந்த இலைகளை நீரில் போட்டு ஊறவைத்த பின் குழித்தால், வேர்வை துர்நாற்றம் நீங்கும்.
6. இந்த இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி நீங்கும்.
7. மேலும், இது கண் கட்டி, முகப்பரு, தேமல், காது கோளாறு போன்றவற்றையும் சரி செய்கிறது.
மன அழுத்தத்தையும் போக்கும்
திருநீற்றுப்பச்சிலையின் மகத்துவமே அதன் மனதை அமைதிப்படுத்தும் பண்பில்தான் அடங்கியுள்ளது. இது ஒரு இயற்கையான அடாப்டோஜென் (Adaptogen) ஆகச் செயல்படுகிறது. அதாவது, மன அழுத்தம் அல்லது பதற்றம் போன்ற உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்களைச் சமாளிக்க இது உதவுகிறது.
1. இதன் இனிமையான வாசனையும், இலைகளில் உள்ள குறிப்பிட்ட சேர்மங்களும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தேவையற்ற பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது.
2. தொடர்ந்து திருநீற்றுப்பச்சிலையை உட்கொள்வது மனதின் தெளிவை மேம்படுத்தி, நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு துணை மருந்தாகச் செயல்பட்டு, ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
சளி, இருமல் நிவாரணியாக மட்டுமின்றி, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும் திருநீற்றுப்பச்சிலை உதவுகிறது. இதை தினமும் தேநீராகவோ அல்லது உணவில் சேர்த்தோ பயன்படுத்தி, அதன் முழுப் பலனையும் பெறலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)