
கைக்குத்தல் அரிசியில் தாதுக்கள், இரும்புச் சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிட்டு வருவதால், இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாகக் குறைகிறது.
கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்னையும் நீங்கும்.
கைக்குத்தல் அரிசியில் செலினியம் உள்ளதால், அது பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்கக்கூடிய தன்மை கொண்டது. இதிலுள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் மார்பகப் புற்று நோய் வராமல் காத்துக்கொள்ள உதவுகிறது.
கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.
கைக்குத்தல் அரிசியில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதைச் சாப்பிடுபவர்களுக்கு உடலில் எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகின்றன.
குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கைக்குத்தல் அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதயத்தின் நலம் மேம்படும்.
தினந்தோறும் ஒரு வேளையாவது கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். உடல் பருமன் பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கும்.
கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயின் கடுமைத் தன்மை குறைகிறது.