இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பால் ஏற்படுகின்றன என்பதை நினைவில்கொள்ளுங்கள். சில எளிய வழிமுறைகளை, வீட்டு வைத்தியங்களை தினமும் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, திடீர் மாரடைப்பை நம்மால் தவிர்க்க முடியும். பூண்டு, இஞ்சி, எலுமிச்சை, ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேன் கலந்த மிக மிக எளிமையான இந்த பானகத்தை வீட்டிலேயே தயாரித்து பயன்பெறலாம்.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது இந்த எளிய பானகம்.
இஞ்சி சாறு - 1 கப், பூண்டு சாறு - 1 கப், எலுமிச்சை சாறு - 1 கப், ஆப்பிள் சைடர் வினிகர் - 1 கப் ஆகிய நான்கையும் ஒரு பாத்திரத்தில் கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவேண்டும். இக்கலவை முக்கால் பாகமாகச் சுண்டியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட வேண்டும். அதனுடன் 3 கப் அளவில் தேனைச் சேர்த்து ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும். அவ்வளவுதான். இதில் முக்கியம், நன்கு ஆறிய பிறகு மட்டுமே தேனைச் சேர்க்க வேண்டும்.
இந்த பானகத்தை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், கழிவுகள் நீங்குவதால் இரத்தம் சுத்திகரிக்கப்படும். இரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
பூண்டு - இரத்தத்தை மெல்லியதாக்குகிறது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதய இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்குகிறது. ஆண்டி பயாடிக் ஆக செயல்படுவதோடு, நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் வீக்கத்தையும், சர்க்கரையின் அளவையும் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இஞ்சி - கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. இஞ்சிக்கும் இரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது.
எலுமிச்சை சாறு - இரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆப்பிள் சாறு வினிகர் - நம் உடலில் மிக எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. இரத்தக் குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை கரைக்க வல்லது. உடலில் உள்ள அனைத்து நரம்புகளையும் திறந்து, வயிற்றை சுத்தப்படுத்தி, சோர்வை நீக்குகிறது.
பின் குறிப்பு: கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இதனை உட்கொள்வதே நல்லது.