
குதிகால் வலி (Heel Pain) ஏற்படுவதற்கான காரணங்கள்
காலின் அடிப்பாகத்தில் ஏற்படும் கடுமையான வலியை தான் குதிகால் வலி என்கிறோம். குதிகால் வலி, சுளுக்கு மற்றும் எலும்பு முறிவின் காரணமாக ஏற்படலாம். அதிகமாக குதிகாலை பயன்படுத்துவதால், காயம் ஏற்பட்டு குதிகால் வலி உண்டாகும். இறுக்கமாக ஷூ போடுவது, உடல் எடை அதிகரிப்பு, அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் இந்த பிரச்னை வரக்கூடும். குதிகால் வலியை சரிசெய்வதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
குதிகால் வலி (Heel Pain) சிகிச்சைக்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள்:
1. குதிகால் வலியை போக்க சிறந்த மருந்து ஓய்வெடுப்பது தான். காலில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் குறையும் வரை கால்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
2. ஐஸ் பேக்கை நன்றாக டவலில் சுற்றி குதிகால் பகுதியில் 10 முதல் 15 நிமிடங்கள் வைப்பதால் வீக்கம் குறையும். இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம்.
3. Non steroidal anti inflammatory drugs Ibuprofen, naproxen பயன்படுத்துவது மூலமாக குதிகாலில் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் வீக்கம் குறையும்.
4. நாம் நடக்கும் போது குதிகாலில் அழுத்தம் ஏற்பட்டு வலி மற்றும் வீக்கம் ஏற்படும். இதைக் குறைக்க Heel cups ஐ பயன்படுத்தலாம். இதை நாம் அணியும் ஷூக்களில் வைத்து விட்டால், கால்களை பாதுகாப்பதோடு காலில் ஏற்படும் வலியையும் குறைக்கும்.
குதிகால் வலி (Heel Pain) சிகிச்சைக்காக எப்போது மருத்துவரை அணுக வேண்டும்
காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக குதிகால் வலி ஏற்பட்டால், நடப்பது அல்லது நிற்பதில் சிரமம் உண்டாகும். குதிகாலை சுற்றி வீக்கம் மற்றும் வலி இருந்தால், கால் மரத்துப்போவது, ஜூரம் ஆகியவை குதிக்கால் வலியுடன் சேர்ந்து வரும்போது வீட்டு வைத்தியத்தை நம்பி மட்டுமேயில்லாமல் கண்டிப்பாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
குதிகால் வலி (Heel Pain) சிகிச்சைக்கான பயிற்சிகள்
கால்களுக்கு பயிற்சி கொடுப்பது மற்றும் Stretches செய்வதால் வலி குறைந்து காலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும், எலும்புகளின் வலிமைக்கூடும். குதிகாலுக்கு அடியில் டென்னிஸ் பந்து அல்லது தண்ணீர் நிரப்பிய வாட்டர் பாட்டிலை வைத்து உருட்டுவது காலில் இருக்கும் டென்ஷனை குறைக்க உதவும்.
உடல் எடையை சீராக பராமரிப்பதன் மூலம் கால்களுக்கு அதிக ஸ்ட்ரெஸ் மற்றும் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம். கால்களுக்கு ஏற்ற நல்ல ஷூக்களை குறைந்த அளவிலான ஹீல்ஸூடன் வாங்குவது சிறந்தது. Shoe Insert என்று சொல்லப்படும் குஷன் போன்ற அமைப்பை ஷூவில் வைத்துக் கொள்வது குதிகாலை பாதுகாக்க உதவும்.
இது எதுவுமே குதிகால் வலிக்கு சரியான தீர்வாக அமையவில்லை என்றால், நல்ல மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது. மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை அல்லது தெரப்பி செய்வதே குதிகால் வலியை நிரந்தரமாக குணப்படுத்த சரியான தீர்வாக அமையும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)