
1. தலையில் நீர்கோர்த்துக் கொண்டு ஏற்படும் தலைவலிக்கு சுக்கு, பெருங்காயத்தை பால் விட்டு உரசி நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி சட்டென்று மறையும்.
2. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, சிறிது பனை வெல்லம் போட்டுக் கலக்கிக் குடித்தால் நெஞ்சு எரிச்சல் நீங்கி விடும்.
3. முருங்கை இலையை கொத்தாக எண்ணெயில் பொரித்து, அத்துடன் வறுத்த மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
4. சளிப்பிரச்னையின் தொடக்கமாக தொண்டை கட்டிக்கொண்டு தொண்டைவலி வந்து பாடாய்படுத்தும். கிராம்பை தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அதன் கஷாயத்துடன் தேன் கலந்து குடித்தால் பிரச்னை சரியாகிவிடும்.
5. கை, கால், தோள் ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்க ஒரு கிராம் பொடித்த பூங்கற்பூரத்தை, லேசாக சுட வைத்த நல்லெண்ணெயில் கலந்து தடவி வர நிவாரணம் நிச்சயம்.
6. ஒரு மேஜைக்கரண்டி தேன், ஒரு மூடி எலுமிச்சைச்சாறு, துளி உப்பு, கொஞ்சம் புளிக்காத தயிர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்றாகக் கலக்கிக் குடித்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்று விடும்.
7. வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், உடல் அரிப்பு ஏற்படாது.
8. காலை உணவை ஒரு போதும் தவிர்க்க வேண்டாம். அப்படித் தவிர்த்தால் எரிச்சல், சோர்வு, மற்றும் ஞாபகமறதி வரக்கூடும்.
9. தினமும் ஒவ்வொரு வேளை உணவையும் ஒரே நேரத்தில் சரியாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
10. சீரகத்தண்ணீரைக் குடித்தால் செரிமானப் பிரச்னைகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என்று மட்டுமல்ல, மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.
11. சூடான பாலில் மஞ்சள் தூள் சேர்த்துக்குடித்து வந்தால் ஜலதோஷம் தணியும். மஞ்சளில் உள்ள குர்மின் சத்து உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல ஒரு மருந்து போல் செயல்படும்.
12. கொய்யாப் பழத்தை மிளகுத்தூள் தொட்டுச் சாப்பிட நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்னையிலிருந்து தீர்வு கிடைக்கும்.