
எல்லோர் வீட்டிலும் எப்போதும் ஒரு பாட்டில் தேன் வைத்திருக்க வேண்டும். மருத்துவ குணங்கள் நிறைந்தது தேன். அவை என்னவென்று பார்ப்போமா?
1. எலுமிச்சைப் பழச்சாற்றில் தேன் கலந்து பருகிவர வறட்டு இருமலுக்கு டாடா சொல்லி விடலாம்.
2. காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும், அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வர கைகால் நடுக்கம் கட்டுப்படும்.
3. தேனுடன் கொஞ்சம் பீட்ரூட் சாறு கலந்து அருந்தினால் வயிற்றுப்புண் குணமாகும்.
4. சிறிது தேங்காய் எண்ணெயில் சில துளிகள் தேனைவிட்டுக் குழைத்து வாயில் புண் இருக்கும் இடங்களில் தடவிவர வாய்புண் நீங்கி விடும்.
5. பப்பாளிப் பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வர தாய்ப்பால் போதுமான அளவு சுரக்கும்.
6. தொண்டை கரகரப்பு, தொண்டைவலி, ஜலதோஷம் போன்ற உடல் உபாதைகளுக்கு தேன் சிறந்த ஒரு மருந்து போல் செயல்படும்.
7. பாலில் தேன் சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
8. ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு மூடி எலுமிச்சைச் சாறு, துளி உப்பு, துளி புளிக்காத தயிர் போன்றவற்றை ஒன்று சேர்த்து நன்றாக கலக்கிக்குடித்தால் வயிற்றுப்போக்கு உடனே நின்று விடும்.
9. தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி ஒன்று வீதம்சாப்பிட்டு வர நுரையீரல், இருதயம் பலப்படும்.
10. வெங்காயத்தை ஒரு பாதி கிளாஸ் வருமளவு ஜூஸ் செய்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்துப் பருகினால் இருமல் விலகி விடும்.
11. காலில் பித்த வெடிப்பா? கவலைவேண்டாம் தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாகக் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
12. ஒரு பங்கு பூண்டுச் சாற்றை இரண்டு மடங்கு தேனில் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று முறை அரை ஸ்பூன் சாப்பிட்டு வர நெஞ்சுக்கட்டு நெருங்காது.