சிரிப்பு என்பது உடலுக்கு மருந்து என்று குறிப்பிடப்படுகிறது. மன அழுத்தத்தை குறைப்பதில் இருந்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவது வரை சிரிப்பு உணர்ச்சி ரீதியாக அறிவியல் ரீதியாக பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது .
சிரிப்பு உணர்ச்சி ரீதியாக உணரப்படுவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். உடல் வலியை குறைக்கும் உடல் மனநிலையை மேம்படுத்தும்.
சிறந்த ஆரோக்கியத்திற்கான மருந்தாக சிரிப்பு கருதப்படுகிறது. அதற்குரிய காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்..
1. மன அழுத்தம்:
மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. சிரிக்கும் போது நம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவு குறைகிறது என்பதால் நம் அழுத்தத்தையும் குறைக்கிறது.
மேலும் கார்டிசோலின் குறைந்த அளவு தசைகளில் உள்ள பதற்றத்தை போக்க உதவுகிறது. உடலை தளர்த்துகிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த மன அழுத்தம் குறைகிறது.
ஒவ்வொரு முறை சிரித்த பிறகு 45 நிமிடங்கள் வரை இது நீடிக்கும். இது மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழி ஆகும்.
கூடுதலாக சிரிப்பு என்டோர்பின்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே தொடர்ந்து சிரிப்பது மனநலத்தை மேம்படுத்தும்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
சிரிப்பு ஆன்ட்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இது உடலின் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு சளி, வைரஸ்கள் மற்றும் பிற நோய்தொற்றுகள் உங்களை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
3. ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
சிரிப்பு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி , இதய துடிப்பை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.
இதனால் லேசான ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பெற முடியும்.
இது ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கும்.
உங்கள் அன்றாட வாழ்வில் அதிக நேரம் சிரிப்பது நல்லது. இருதய பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கலாம்.
4. இயற்கை வலி நிவாரணி:
இயற்கை வலி நிவாரணியாக சிரிப்பு செயல்படுகிறது .
சிரிப்பின் போது வெளியாகும் எண்டோர்பின்கள் மனநிலையை மேம்படுத்துவதுடன் இல்லாமல், இயற்கையான வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
சிரிப்பு மூளையின் ரசாயனங்களின் வெளியீட்டை தூண்டுகிறது. இது வலி உணர்வை குறைக்கிறது . நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்தாகும்.
கீல்வாதம் ,ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளை கொண்ட நபர்களுக்கு சிரிப்பு குறுகிய கால நிவாரணம் ஆகும்.
5. சமூகத் தொடர்புகளை மேம்படுத்தும்:
உறவுகளை வலுப்படுத்த சிரிப்பு ஒரு சக்தி வாய்ந்த கருவி ஆகும். சிரிப்பு உணர்ச்சியை பிணைப்பை, நட்பை வளர்க்கிறது, தகவல் தொடர்புகளை மேம்படுத்துகிறது, மோதல்களை சண்டைகளை தீர்க்க உதவும். மக்களிடையே பதட்டமான சூழ்நிலைகளை தணிக்கும். மன ஆரோக்கியத்திற்கு நேர்மறையான சமூக தொடர்புகளை சேர்த்து வைக்கும். சினிமா, டி.விக்களில் வரும் நகைச்சுவைகைளை கண்டு சிரிப்பதால் மனம் மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியம் பெறும்.
6. மன ஆரோக்கியம் மேம்படும்:
மனநல நிபுணர்கள் அடிக்கடி சிரிப்பதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மன சோர்வு ஆகியவை அகலும் என கருதுகின்றனர்.
இது எதிர்மறை உணர்ச்சிகளிலிருந்து இயற்கையான கவனச்சிதறலை வழங்குகிறது. நோயாளிகளுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி குணமடைய செய்யும் .
சில சமயங்களில் நோயாளிகளுக்கு சிரிப்பு சிகிச்சை தெரபியும் பயன்படுத்தப்படுகிறது.
சமாளிக்கும் திறனையும் அதிகரிக்கும்:
நகைச்சுவை உணர்வை பேணுவதன் மூலம் தனிநபர்கள் சவால்கள் மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளை மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்க்க முடியும் .
சிரிப்பு நம்பிக்கையற்ற உணர்வுகளை குறைத்து மன வலிமையை அதிகரிக்கும்.
சிரிப்பு தசைகளை தளர்த்தி உடல் ரீதியான பதத்திற்கு குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிரிக்க வேண்டிய நேரங்களில் சிரியுங்கள், உடல் நலன் ஆரோக்கியமாக இருக்க சிரியுங்கள்.