மலச்சிக்கலைத் தீர்க்கும் பாப்கான்... எப்படி?

Constipation
How Popcorn Helps to Reduce Constipation

மலச்சிக்கலை எளிதாக தீர்ப்பதற்கு ஒரு இயற்கையான வழியை தேடுகிறீர்களா? அப்படியானால் பாப்கான் சாப்பிடுங்கள். ஆம்! நான் சொல்வது உண்மைதான். பாப்கான் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குமாம். இந்த பிரபலமான திரைப்பட ஸ்னாக்ஸ் உண்மையிலேயே மலச்சிக்கலை போக்கி உங்களது செரிமான அமைப்பை சீராக்க உதவும். இந்த பதிவில் உங்கள் உணவில் பாப்கனை சேர்த்துக்கொள்வது எப்படி பல விதங்களில் நன்மை புரியும்? என்பதைப் பற்றி பார்க்கலாம். 

பாப்கார்ன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த உணவில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. நமது உடலுக்கு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தான நார்ச்சத்து மலத்தை இலக்கி செரிமான பாதை வழியாக செல்வதை எளிதாக்குகிறது. எனவே உங்களது பைபர் உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் உங்களது குடல் இயக்கங்களை ஊக்குவித்து மலச்சிக்கலைப் போக்கலாம். 

நார்ச்சத்து மட்டுமின்றி பாப்கானில் சிறிதளவு நீர்ச்சத்தும் உள்ளது. ஆரோக்கியமான செரிமானத்திற்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியம். இது மலத்தை மென்மையாக்க உதவி எளிதாக வெளியேற்றும். அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பாப்கானை உட்கொள்வது உங்களது மலத்தை போதுமான ஈரப்பதத்துடன் வைத்திருந்து மலச்சிக்கலை தடுக்க உதவும். 

ஆனால், பாப்கானை நீங்கள் சாப்பிடும் போது அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும் லேசாக எண்ணெய் தடவப்பட்ட பாப்கானை தேர்வு செய்யுங்கள். அதிகப்படியான வெண்ணை அல்லது உப்பு சேர்க்கப்பட்டவற்றை தவிர்க்கவும். ஏனெனில் அவை உங்கள் செரிமான அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
Term Insurance என்றால் என்ன? இது என்ன அவ்வளவு முக்கியமா? 
Constipation

அதேநேரம், பாப்கார்ன் மலச்சிகளை எதிர்த்துப் போராடுகிறது என்பதற்காக அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. உங்களது சீரான உணவில் ஒரு பகுதியாக பாப்கானை இணைப்பது அவசியம். ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்ளுங்கள். 

அடுத்த முறை நீங்கள் மலச்சிக்கலை எதிர்கொண்டால், பாப்கான் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும். இது உங்களது பசியை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் செரிமான அமைப்பை மீட்டெடுக்கவும் உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com