அசிடிட்டி என்னும் ஆரோக்கியக் குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?

How to avoid the health problem of acidity
How to avoid the health problem of acidity

நாம் உண்ணும் உணவு வயிற்றினுள் சென்று, ஜீரணத்தின் ஆரம்பமாக வயிற்றில் சுரக்கும் ஒருவித அமிலத்துடன் கலந்து கரைக்கப்படுகிறது. அவ்வாறு சுரக்கும் அமிலமானது தேவைக்கு அதிகமாகும்போது அது பின்னோக்கி உணவுக் குழாய்க்குச் சென்று ஒருவித எரிச்சலையும் அசௌகரியத்தையும் உண்டுபண்ணும். மார்புப் பகுதிக்கும் அந்த எரிச்சல் பரவுவது சகஜம். இதைத்தான் அசிடிட்டி எனக் கூறுகிறோம். இப்பிரச்னை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஓட்ஸ்ஸில் உள்ள அதிகளவு நார்ச்சத்தானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தை உறிஞ்சியெடுத்துக் கொள்ளும் சக்தி கொண்டது. எனவே, இந்த உணவை உண்ணுவதால் பிரச்னையின்றி செரிமானம் தொடரும்.

வீக்கத்தை குறைக்கும் குணம் கொண்ட இஞ்சியை உணவுடன் சேர்த்து உண்ணும்போது நெஞ்செரிச்சல் குறைகிறது. ஃபிரஷ் இஞ்சியை உணவில் சேர்ப்பதும், இஞ்சி டீ போட்டு குடிப்பதும் குணமளிக்கும்.

வாழைப்பழத்திலுள்ள அன்டாசிட் என்னும் ஒரு வகை அமிலமானது வயிற்றினுள் சுரக்கும் அமிலத்தினை சமநிலைப்படுத்தி, நெஞ்செரிச்சலையும் செரிமானக் கோளாறுகளையும் தடுக்க வல்லது. ஆகவே, அசிடிட்டி கோளாறு உள்ளவர்கள் வாழைப்பழம் உண்பது நன்மை பயக்கும்.

குறைந்த அமிலத்தன்மையும் நிறைய ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பசலைக் கீரை, காலே, ப்ரோக்கோலி போன்ற கீரை/காய் வகைகளை உண்பதால் வயிற்று அமிலம் பின்னோக்கி உணவுக் குழாய்க்குள் செல்வது தடுக்கப்படுகிறது. இவற்றை அடிக்கடி உண்பது நலம் தரும்.

பால் பொருட்கள் சில நேரங்களில் நெஞ்செரிச்சலைத் தரக்கூடும். அதற்குப் பதிலாக அமிலத் தன்மையற்ற பாதாம் பால் அருந்துவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது.

உணவுக் குழாயினுள் செல்லும் வயிற்று அமிலத்தினால் ஏற்படும் எரிச்சலையும் வீக்கத்தையும் குறைத்து குணமாக்க வல்லது ஆலூவேரா ஜூஸ். இதை அருந்தியும் நோயாளிகள் குணமடையலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்கும் வெந்தயத்தை உண்ண ஐந்து சிறந்த வழிகள்!
How to avoid the health problem of acidity

பப்பாளிப் பழத்தில் உள்ள சில என்சைம்கள் சிறப்பான செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும், இயற்கையாகவே அதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது நெஞ்செரிச்சலைத் தடுக்க வல்லது.

அதிகளவு நீர்ச்சத்தும் பாஸ்பரஸ்ஸும் கொண்டுள்ள தர்பூசணி மற்றும் கிர்ணிப் பழங்கள் வயிற்று அமிலத்தை சமப்படுத்தி, அசிடிட்டி பிரச்னை தலையெடுக்காமல் காக்கின்றன.

சாப்பாட்டுக்குப் பின் சிறிது பெருஞ்ஜீரகத்தை வாயில் போட்டு மெல்வது, செரிமானம் தடையின்றி நடைபெறவும், வயிற்று அமிலம் பின்னோக்கிச் செல்லாமல் பாதுகாக்கவும் உதவி புரியும்.

மேற்கூறிய உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி அசிடிட்டி வராமல் ஜீரண மண்டலத்தைப் பாதுகாப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com