ஆமா! ஒரு நாளைக்கு எவ்வளவுதான் உணவு சாப்பிடணும்? ஒரே குழப்பமா இருக்கே!

Eating Food
Eating Food
Published on

ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்பது பலருக்கு எழும் ஒரு பொதுவான கேள்வியாகும்.‌ ஆனால், இதற்கு முறையாக பதிலளிக்க முடியாது. ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, வயது, பாலினம், செயல்படும் விதம் மற்றும் பிற காரணிகள் ஆகியவற்றைப் பொறுத்து உணவுத் தேவை மாறுபடும். ஆனால், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் சரியான அளவு உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். 

1. BMI: உங்கள் உடல்நிறை குறியீட்டு எண் (Body Mass Index - BMI), உங்கள் உயரம் மற்றும் எடையைப் பொறுத்து உங்கள் உடல் கொழுப்பின் அளவை மதிப்பிட உதவும் ஒரு எளிய கருவி. ஆனால், இது ஒரு சரியான அளவீடு அல்ல. ஏனெனில், தசை நிறை அதிகம் உள்ளவர்களுக்கு BMI அதிகமாக இருக்கலாம். இருப்பினும் உங்கள் பொதுவான உடல் நிலையைப் பற்றி ஒரு யோசனையைப் பெற இது உதவும். 

2. கலோரிகள்: கலோரி என்பது உணவில் உள்ள ஆற்றலின் அளவைக் குறிக்கும் அலகு. உண்ணும் உணவில் உள்ள கலோரிகளின் எண்ணிக்கை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. உடல் செயல்பாடுகள், உடற்பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கு கலோரிகள் அவசியமானவை. 

3. உடல் செயல்பாடு: உங்கள் உடல் செயல்பாட்டின் அளவு உங்கள் கலோரி தேவையை பெரிதும் பாதிக்கும். அதிகம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, குறைவாக உடற்பயிற்சி செய்பவர்களை விட அதிக கலோரிகள் தேவைப்படும். 

4. வயது மற்றும் பாலினம்: வயது மற்றும் பாலினம் ஆகியவை உங்கள் கலோரி தேவையை பாதிக்கும் மற்றொரு காரணி. வளரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு வயதானவர்களை விட அதிக கலோரிகள் தேவைப்படும். பொதுவாக ஆண்களுக்கு பெண்களை விட அதிக கலோரிகள் தேவைப்படும். 

இதையும் படியுங்கள்:
சிறுதானிய உணவு சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை!
Eating Food

5. உணவுப் பொருட்கள்: ஒவ்வொரு உணவுப் பொருளிலும் வெவ்வேறு அளவு கலோரிகள் இருக்கும். காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த கலோரி கொண்டவை. கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் அதிக கலோரி கொண்ட. 

மேலே, குறிப்பிட்ட 5 காரணிகளைப் பொறுத்து நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் சரியான அளவு உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். எனவே, உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உங்கள் உடலுக்குத் தேவையான உணவுத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com