உடற்பயிற்சி செய்யுறவங்க, உடல் எடையை குறைக்கணும்னு நினைக்கிறவங்க, தசை வளர்ச்சிக்குன்னு பலரும் புரோட்டீன் பவுடர் (Protein Powder) பயன்படுத்துறாங்க. ஆனா, மார்க்கெட்ல நிறைய போலியான புரோட்டீன் பவுடர்களும் விக்கிறாங்க. இது உடம்புக்கு ரொம்ப ஆபத்தானது. நீங்க வாங்குற புரோட்டீன் பவுடர் போலியா, இல்ல ஒரிஜினலான்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு இங்க சில முக்கியமான டிப்ஸை பார்ப்போம்.
1. ஸ்கேன் செஞ்சு பாருங்க: பெரும்பாலான ஒரிஜினல் புரோட்டீன் பவுடர்கள்ல ஒரு கியூ.ஆர் கோடு (QR code) இருக்கும். அந்த கியூ.ஆர் கோடை உங்க போன்ல ஸ்கேன் செஞ்சு பாருங்க. அது உங்களை அந்த கம்பெனியோட அதிகாரப்பூர்வமான வெப்சைட்டுக்கு கூட்டிட்டு போகும். போலியான தயாரிப்புகள்ல கியூ.ஆர் கோடு இருக்காது, இல்லனா அது வேலை செய்யாது.
2. பாக்கெட்டை கவனமா பாருங்க: போலியான புரோட்டீன் பவுடரோட பாக்கெட், ஒரிஜினல் மாதிரி இருக்காது. எழுத்துக்கள் தெளிவில்லாம இருக்கும், கலர் மாறி இருக்கும், இல்லனா அச்சிடுறதுல தவறுகள் இருக்கும். சீலிங் சரியா இல்லாம, ஒரு மாதிரி லூசா இருக்கும். ஒரிஜினல் தயாரிப்புகள்ல பாக்கெட் ரொம்பவே தரமா, தெளிவான எழுத்துக்களோட இருக்கும்.
3. தண்ணீர்ல கரைச்சு பாருங்க: இது ஒரு சிம்பிளான வழி. ஒரு கிளாஸ் தண்ணில புரோட்டீன் பவுடரை கலந்து பாருங்க. ஒரிஜினல் புரோட்டீன் பவுடர் தண்ணில சீக்கிரம் நல்லா கரையும். போலியான பவுடர் கட்டி கட்டியா இருக்கும், முழுசா கரையாது. அப்புறம், தண்ணீர்ல கலக்கும்போது ரசாயன கலவை மாதிரி வித்தியாசமான வாசனை வரலாம்.
4. விலையை ஒப்பிடுங்க: ஒரு புரோட்டீன் பவுடர் ரொம்பவே கம்மியான விலையில கிடைச்சா, அது போலியா இருக்க வாய்ப்பு அதிகம். ஒரிஜினல் தயாரிப்புகளோட விலை பொதுவா அதிகமா இருக்கும். அதனால, விலையை பார்த்து வாங்குறது ரொம்ப முக்கியம்.
5. நுரை மற்றும் வாசனை: போலியான புரோட்டீன் பவுடரை தண்ணில கலந்து குலுக்கும்போது அதிகமா நுரை வரும். அதே சமயம் ஒரிஜினல் புரோட்டீன் பவுடரை குலுக்கினா அதிகமா நுரை வராது. அப்புறம், போலியான பவுடர் ஒருவித கெமிக்கல் வாடையோட இருக்கும்.
இந்த 5 விஷயங்களை நீங்க புரோட்டீன் பவுடர் வாங்குறதுக்கு முன்னாடி, இல்ல வாங்குனதுக்கு அப்புறம் செக் செஞ்சு பாருங்க. போலியான புரோட்டீன் பவுடரை தவிர்த்து, ஒரிஜினல் தயாரிப்புகளை மட்டும் பயன்படுத்தி, உங்க ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கங்க.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)