அதிகளவு கால்சியம் உள்ள கருப்பு எள்ளை எப்படியெல்லாம் உணவுகளில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
கால்சியம் உடம்புக்கு மிக மிக அவசியம். எலும்பு ஆரோக்கியத்திலிருந்து குழந்தை பிறந்தப்பின்னர் அம்மாவின் உடல் ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் கால்சியம் சத்து தேவை. ஆகையால்தான் பால் பலரின் முக்கிய ஊட்டச்சத்தாக இருந்து வருகிறது.
கால்சியம் சத்து எலும்பு ஆரோக்கியம், தசை இயக்கம், இதய செயல்பாடு, நரம்பு செயல்பாடு, ஹார்மோன் செயல்பாடு போன்றவற்றிற்கு நன்மை தருகிறது.
இந்த கால்சியம் சத்து பால் பொருட்கள், பழங்கள், பயிறு, நட்ஸ், கீரைகள், மீன்கள் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. அந்தவகையில் எள்ளில் எந்தளவிற்கு கால்சியம் உள்ளது எந்தெந்த உணவில் சேர்த்து சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
எள்ளில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. மேலும் கால்சியம், புரதச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை உள்ளன.
மேலும் எள் விதையை தினமும் எடுத்துக்கொள்வதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு , மலச்சிக்கலுக்கு தீர்வு, இதய ஆரோக்கியம், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம், ரத்த அழுத்தத்திற்கான தீர்வு, ஹார்மோன் சமநிலை என அனைத்திற்கும் கால்சியம் சத்து தேவை.
பாலை விட எள்ளில் அதிகளவு கால்சியம் இருக்கிறது. 100 கிராம் பாலில் 125 மில்லிகிராம் கால்சியம் இருக்கிறது. ஆனால் அதே 100 கிராம் எள் விதைகளில் 1000 மில்லிகிராம் கால்சியம் இருக்கிறது.
உணவில் எப்படி எள் சேர்த்துக்கொள்ளலாம்:
1. எள்ளை வறுத்து முழு எள்ளாகவோ அல்லது பொடியாகவோ எடுத்து அதனுடன் வெள்ளம் சேர்த்து லட்டு செய்து சாப்பிடலாம்.
2. எள்ளை வறுத்துப் பொடி செய்து தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
3. நெல்லிக்காய், வறுத்த எள் அதோடு தேன் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
4. எள்ளை மிளகாய், சீரகம், உளுந்து ஆகியவற்றுடன் சேர்த்து வறுத்து இட்லி பொடியாக பயன்படுத்தலாம்.
5. தினமும் எள் எண்ணையை சமயலுக்குப் பயன்படுத்தலாம்.
இப்படி தினமும் எள்ளை சேர்த்துக்கொண்டு வாருங்கள். இது பாலை விட பல மடங்கு கால்சியம் சத்தைத் தரும்.