அக்கினி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே இவ்வளவு வெயிலா? தப்பிக்க இந்த விஷயங்களை உடனே செய்யுங்க!

Summer Heat Protection
Summer Heat ProtectionImg credit: AI Image
Updated on

கோடைகாலம் வந்தாலே சுட்டொிக்கும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதிலும் சிலர் சொல்லுவாா்கள் எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிக்கொள்ளலாம்; ஆனால் அடைமழை பெய்தால்தான் தாங்க முடியவில்லை என்பாா்கள். அதே நேரம் சிலர் நல்ல வெயில் கொளுத்துகிறது தாங்கமுடியவில்லை; ஒரு மழைபெய்தால் கொஞ்சம் வெயிலின் உக்கிரம் குறையும் என்பாா்கள். இது மனித வர்க்கத்திற்கே உள்ள இயல்பு.

அதேபோல இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறது ஆராய்ச்சி மையம்.

அதுவும் ஏப்ரல் 29 முதல் மே மாதம் 12 வரை வெயிலின் தாக்கம் வெப்ப நிலை 45 டிகிாி முதல் 55 டிகிாி வரை இருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

  • எனவே யாரும் முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் வெயிலில் செல்வதை தவிா்ப்பது நல்லதாகும். யாருக்கேனும் உடல் சோா்வு, மயக்கம், காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

  • வீட்டில் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை மூடிவைக்க வேண்டாம்.

  • தினசரி நிறைய அளவு தண்ணீா் குடிப்பது சிறப்பான ஒன்று.

  • அசைவம், மது, புகை பழக்கத்தை கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

  • காலையில் எழுந்ததும் நீராகாரம் அருந்துவது நல்லது.

  • குளிச்சி தரும் உடனடி பழச்சாறுகள், இளநீா், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லது. (நீரழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இளநீா் அருந்த வேண்டும்.)

  • எளிதில் சீரணம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது.

  • மோா் சாப்பிடுவது தாகம் தணிக்கும். நன்னாாி, கிரேப், தாழம்பூ எசன்ஸ், இவற்றை ஐஸ் கட்டிகள் சோ்க்காமல் சாப்பிடுவது நல்லது.

  • உப்பு, புளிப்பு, காரம் குறைவாய் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் ஏன் எண்ணெய் குளியல் அவசியம்? காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்!
Summer Heat Protection
  • ஒரு மண்பானையில் குளிா்ந்த நீரை நிரப்பி ஓமம், சீரகம், வெந்தயம், கலந்து வெட்டிவேரை வெள்ளைத்துணியில் கட்டி பானைக்குள் போட்டு அருந்துவது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

  • ஏசி அதிக அளவு பயன்படுத்தாமல் இருப்பது நலம்.

  • பாஸ்ட் புட் தவிா்ப்பது சிறப்பிலும் சிறப்பு.

  • கதர், வாயில் துணிகள் அணிவது நல்லது.

  • வெயிலில் வோ்க்குரு வந்தால் சந்தனத்தை அரைத்து போட நல்ல குணம் தொியும்.

  • நாா்ச்சத்து நிறைந்த பழங்கள், கறிகாய் வகைகள் சோ்ப்பதும் நல்லதே.

இப்படி நமது கையிலேயே ஆரோக்கிய விஷயங்கள் நிறைய இருக்கும் போது நாம் ஏன் கடுமையான வெயிலுக்கு பயப்படவேண்டும்.

ஆக நமக்கு தொிந்த பழைய வாழ்க்கை முறைக்கு மாறுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்!  

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com