நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு கல்லீரல். ஹெபடைடிஸ் (hepatitis) என்பது கல்லீரலின் வீக்கத்தை குறிக்கும். இதில் பொதுவாக ஏ, பி, சி, டி என நான்கு வகையான வைரஸ்கள் உள்ளன. மது அருந்துவது, புகை பிடிப்பது, ஆட்டோ இம்யூன் கோளாறுகள், வளர்சிதை மாற்றம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
ஹெபடைடிஸ் ஏ, இ வகையான தொற்றுகள் மாசுபட்ட நீர் உணவு இவற்றின் மூலம் பரவுகிறது. இவை குறுகிய காலத் தொற்றுகள் ஆகும். பி, சி வகை தொற்றுகள் நீண்ட கால தொற்றுகள் ஆகும்.
எந்தவிதமான அறிகுறிகளும் தென்படாமல் கல்லீரலை சேதப்படுத்தும். இதற்கு தகுந்த நேரத்தில் சிகிச்சை எடுக்க விட்டால் கல்லீரல் வடு, கல்லீரல் செயல் இழப்பு, முற்றிய நிலையில் கல்லீரல் கேன்சருக்கு வழிவகுக்கும்.
ஹெபடைடிஸ் (hepatitis) ஏ, பி பாதிப்புக்கு தடுப்பூசிகள் உள்ளன. இவை நல்ல பலன் அளிக்கும். ஆனால் இது ஆரம்ப நிலையில் தெரியாது. தொற்று தீவிரமடையும் வரை இதன் செயல்பாடு தெரியாது. பல மணி நேரம் அமர்ந்து ஒரே இடத்தில் வேலை பார்ப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை, உணவு முறை, உடல் பருமன், டைப் 2 நீரழிவு போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படலாம்.
எம்.எஸ்.எல்.டி என்பது கல்லீரலில் கொழுப்பு சேர்வது துவங்கி இறுதியில் கல்லீரல் கேன்சரில் கொண்டு போய் முடியும். இளைஞர்கள் இடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதால் 20 முதல் 30 சதவீதம் வரை கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. பைப்ரோ ஸ்கேன் உதவியால் இதனை கண்டறியலாம் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஹெபடைடிஸ் (hepatitis) பி, சி தொற்றுக்களை கண்டறிய முடியும்.
ஹெபடைடிஸ் சி தொற்று நோய்க்கு எச்.சி.வி போன்ற சோதனைகள் மூலம் இதனை கண்டறிய முடியும் இதன் மூலம் சரியான மருந்துகளை தேர்வு செய்ய முடியும். இதன் மூலம் 95% பேருக்கு முழுமையான சிகிச்சை 8 முதல் 12 வாரங்களுக்குள் வழங்க முடியும்.
டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், கர்ப்பிணிகள், சுகாதாரப் பணியாளர்கள், ஐ வி வழியாக மருந்து உட்கொள்பவர்கள் ஹெபடைடிஸ் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன் மூலம் கல்லீரல் பாதிப்பை சரி செய்யலாம். வருமுன் காப்பது சிறந்ததாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)