
நாம் பெரும்பாலும் ரேஷன் கடையில் வாங்கும் பாமாயிலை (Palm oil) வீட்டிற்கு பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அதிகமாக பாமாயிலை சாப்பிடுவதால் ஆரோக்கிய பிரச்னை ஏற்படுமோ? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. இதில் இருக்கும் உண்மை என்னவென்பதை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நாம் கடையில் பிஸ்கட், சிப்ஸ் போன்ற ஏதோ ஒரு ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி அதனுடைய Ingredients ஐ பார்த்தால் கண்டிப்பாக அதில் பாமாயில் (Palm oil) இடம் பெற்றிருக்கும். இதை ரேசன் கடையில் தருகிறார்கள், சமையலுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை தாண்டி இன்று மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான Processed foods ல் இந்த பாமாயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உயரத்தில் சிறிதாக இருக்கக்கூடிய பனை மரம் தான் செம்பனை. இதிலிருந்து விளையக்கூடிய பழத்திலிருந்து தான் இந்த எண்ணெய்யை பிரித்து எடுக்கிறார்கள். இந்த பழத்தினுடைய சதைப்பகுதியில் இருந்து பிரித்து எடுக்கக்கூடிய எண்ணெய்க்கு தான் பாமாயில் என்று பெயர்.
அதன் மையப்பகுதியில் இருக்கும் கொட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு Palm kernel oil என்று பெயர். பாமாயிலை உணவு பொருட்களுக்கும், Palm kernel oilஐ காஸ்மெட்டிக்ஸுக்கு அதிகம் பயன்டுத்துவார்கள்.
இந்த பாமாயிலில் Fatty acids ஐ பொருத்தவரை Saturated fat 50 சதவீதம் உள்ளது மீதி 50 சதவீதம் Unsaturated fat உள்ளது. பாமாயிலில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. இது தவிர பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளது. பாமாயில் என்றால் கெடுதலான ஒன்று என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது அதிலிருக்கும் Saturated fat.
Fats என்பது 95 சதவீதம் Triglycerides ஆல் உருவானது தான். கொழுப்பு என்பது மனிதனின் உடலுக்கு தேவையான ஒன்று தான். எனர்ஜியை சேமிப்பதற்கு, செல்களை உருவாக்குவதற்கு என்று பலவகையில் உடலில் பல வேலைகளை இந்த கொழுப்பு செய்கிறது. இதை Saturated fat, unsaturated fat மற்றும் Trans fat என்று பிரிக்கிறார்கள்.
Unsaturated fat மட்டுமே உடலுக்கு நன்மை தரக்கூடியது. Saturated fat மற்றும் Trans fat உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இதை அதிக அளவில் உட்கொள்ளும் போது நம் உடலில் Bad cholesterol ஐ உண்டு பண்ணும். இந்த கொழுப்பு அதிகமானால் நம் உடலில் உள்ள ரத்த நாளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேர ஆரம்பிக்கும். இதனால் தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற இதய பிரச்னைகள் ஏற்படுகிறது.
தேங்காய் எண்ணெய்யில் 80 சதவீதம் Saturated fat இருக்கிறது. வெண்ணெய்யில் 51 சதவீதமும், நெய்யில் 60 சசவீதமும் Saturated fat உள்ளது. இதுப்போல நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களிலும் Saturated fat இருக்கிறது. விலை மலிவாக இருக்கும் காரணத்தினால் பாமாயில் அதிக இடங்களில் பயன்படுத்துகிறார்கள். அதனால் அதை நாம் அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே, பாமாயிலால் பிரச்னையில்லை அதை நாம் அதிகம் உட்கொள்வதே பிரச்னைக்கு வழிவகுக்கிறது.
பாமாயிலில் செய்யப்படும் Refined process ஆல் அதிலிருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டுவிடும். எனவே, பாமாயிலை வீட்டில் பயன்படுத்தும் வரை எந்த பிரச்னையும் இல்லை. கடையில் போய் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்து விடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)