கோடை காலத்தில் நீரினால் பரவும் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

Waterborne disease
Waterborne disease
Published on

கோடை காலத்தில் அடிக்கும் வெயிலுக்கு வெளியே செல்கின்றவர்கள் தங்களது தாகத்தை தீர்த்து கொள்ள சாலையோரங்களில் விற்கப்படும் குளிர்பானங்கள் மற்றும் வெட்டி வைத்த பழங்களையே வாங்கி பெரும்பாலும் சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் பெரும்பாலும் பொது தொட்டிகள், குழாய்கள் மற்றும் குழாய் கிணறுகள் போன்ற அசுத்தமான நீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுத்து செய்யப்படும். பொதுவாக இந்த நீரில் இருந்துதான் நீரால் பரவும் நோய்கள் பரவுகின்றன. இப்படி பரவும் நோய்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது பார்க்கலாம்.

டைபாய்டு என்பது பொதுவாக சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல். இந்த தொற்று நோய் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பரவுகிறது. டைபாய்டு கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் அடிவயிற்றில் வலி போன்ற உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது ஆபத்தானதாகவும் மாறும்.

நீர் மூலம் பரவும் மற்றொரு நோய் காலரா, இது விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் மட்டுமே பரவுகிறது.

அசுத்தமான நீர் காலராவைப் பரப்பி வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான நீரிழப்பை ஏற்படுத்துகிறது. காலராவும் ஆபத்தானது என்றாலும், 10 பேரில் 1 பேர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையை அடைகின்றனர்.

ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் E அசுத்தமான நீர் மூலம் பரவும் ஹெபடைடிஸ் வைரஸின் துணை வகைகள். இது அசுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வதன் மூலம் தூண்டப்படுகிறது. இந்த நீரினால் பரவும் நோய் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டை தற்காலிகமாக பாதிக்கிறது. இருப்பினும், இந்த தொற்று ஆபத்தானது அல்ல, அது தானாகவே போய்விடும். ஹெபடைடிஸ் E. பொதுவாக கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை அதிகம் பாதிக்கும். வாந்தி, குமட்டல் இதன் அறிகுறிகள்.

வயிற்றுப்போக்கு என்பது, தளர்வான அல்லது மலம் அடிக்கடி வெளியேறுவது. உலக சுகாதார அமைப்பு வரையறைப்படி, ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தளர்வான மலம் கழிப்பது வயிற்றுப்போக்கு எனப்படும். ரோட்டா வைரஸ், நோரோவைரஸ் போன்ற வைரஸ் தொற்றுகள், சால்மோனெல்லா, ஈ.கோலை போன்ற பாக்டீரியா தொற்றுகள் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டால், அவர்கள் உடனடியாக போதுமான திரவங்களை குடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் உயிருக்கு ஆபத்தானதாகும். வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.

நீரினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்க:

  • சுத்தமான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் பயன்படுத்தி வர வேண்டும். சுத்தமான தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும். இயற்கையாக கிடைக்கும் நீரை அப்படியே பருக வேண்டாம்.

  • உங்கள் பானங்களில் ஐஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தெருவோர கடை உணவைத் தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு ஆபத்து உள்ள இடங்களுக்குச் செல்லும்போது, பாட்டில் தண்ணீரைத் தேர்ந்தெடுக்கவும். வீட்டில் குடி தண்ணீர் ஃபில்டர் பயன்படுத்தி வந்தால் அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.

  • சாப்பிடும் முன் கைகளை கிருமி நாசினி சோப் போட்டு கழுவி விட்டு சாப்பிட வேண்டும். சமைக்கும் முன் கைகளை கழுவி விட்டு சமைக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி விட்டு சமைக்க வேண்டும். மிதமான சூட்டில் சமையல் செய்ய வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்வது நல்லது. குறிப்பாக ஃபாஸ்ட் புட்களை சரியான வெப்பநிலையில் சமைக்க வேண்டும். அவற்றை ஃபிரஸாக சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குடற்புழுக்களை நீக்க சில எளிய வீட்டு வைத்தியம்!
Waterborne disease
  • சீக்கிரம் கெட்டுப் போகும் பொருட்களை பிரிட்ஜில் வைத்து பாதுகாப்பது நல்லது. பொதுவாக கோடை காலத்தில் பழங்கள் விரைவில் கெட்டுப் போகும். இந்த நேரத்தில் தான் ஈக்கள் அதிகம் பழங்கள் மீது அமரும். எப்போதும் முழு பழங்களை வாங்கி அதை கழுவி விட்டு சாப்பிட வேண்டும்.

  • எதையும் பச்சையாக மென்று சாப்பிட கூடாது. தெருவோரம் விற்பனைக்கு இருக்கும் பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெட்டி வைத்த தர்பூசணி பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் தான் சால்மோனெல்லா மற்றும் ஈ கோலி கிருமிகள் உருவாகுகிறது. உங்கள் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளிச்சிங் பவுடரை பயன்படுத்தி கழிப்பறைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடல்வலி, சரும பிரச்னைகளைத் தீர்க்கும் கமர்காஸ்!
Waterborne disease

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com