
குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஐஸ்கிரீம் உடலுக்கு நல்லதா? தற்போது கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான ஐஸ்கிரீம்கள் ஐஸ்கிரீம்களே கிடையாது என்றும் அவை Frozen dessert என்றும் சொல்லப்படுகிறது. இதை வெஜிடபிள் ஆயிலில் இருந்து தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஐஸ்கிரீம் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பாலில் சர்க்கரை, பிளேவர்கள் சேர்த்து குளிர்ச்சியூட்டும் போது அது ஐஸ்கிரீமாக மாறுகிறது. ஆனால், தற்போது மார்க்கெட்டில் தயாரிக்கப்படும் சில ஐஸ்கிரீம்கள் இந்த முறையில் தயாரிக்கப்படுவதில்லை. பாலுக்கு பதிலாக பால் பவுடர் மற்றும் பாமாயில், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதையும் கூட கொழுப்புக்காக பயன்படுத்த முடியும். இதனுடன் பிளேவர்ஸ், சர்க்கரை சேர்க்கப்பட்டு ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுகின்றன.
சில ஐஸ்கிரீம் காம்பெனிகள் பாலை பயன்படுத்துகிறார்கள். மற்ற சில ஐஸ்கிரீம் கம்பெனிகள் இதுப்போன்ற Frozen dessert ஆக தயாரித்து விற்பனை செய்கிறார்கள். Frozen dessert ஐ விற்கும் கம்பெனிகள் அதை தெளிவாக விளக்குவதில்லை. ஏனெனில், வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் சாப்பிடுவது, 'உண்மையான ஐஸ்கிரீம் இல்லை' என்ற உணர்வு ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
இதற்காகவே வாங்குவதற்கு முன் Ingredients என்னவென்பதை பார்த்து தெளிவாக வாங்க வேண்டியது அவசியமாகும். 10 சதவீதத்திற்கு கீழ் ஐஸ்கிரீமில் பால் இருந்தால் அதை ஐஸ்கிரீம் என்று குறிப்பிடக்கூடாது; அதை Frozen dessert என்று சொல்ல வேண்டும் என்று Fssai இந்திய உணவு பாதுகாப்பு துறை கூறுகிறது.
பால் சம்மந்தமான உணவுகள் சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது Lactose intolerance உள்ளவர்கள் மாற்றாக இதை எடுத்துக் கொள்ளலாம். அதைப்போலவே குறைந்த சர்க்கரை, கொழுப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள் Frozen dessert ஐ தேர்ந்தெடுக்கலாம்.
'ஐஸ்கிரீம் ஆரோக்கியமானதா அல்லது Frozen dessert ஆரோக்கியமானதா?' என்று பார்த்தால் இரண்டிலுமே சர்க்கரை அதிக அளவில் இருப்பது ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடியதாகவே இருக்கிறது. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)