இந்த உண்மை தெரிந்தால் நீங்க மவுத்வாஷ் பயன்படுத்தவே மாட்டீங்க!

Mouth Wash
Mouth Wash
Published on

இன்றைய நவீன உலகில், வாய் சுகாதாரம் என்பது இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. புத்துணர்ச்சியான சுவாசம், சுத்தமான பற்களுக்காக, பலர் மவுத்வாஷை அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்துகின்றனர். சமீபத்திய ஆய்வுகள், மவுத்வாஷை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு குறிப்பாக சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றன.

மவுத்வாஷ், வாய் துர்நாற்றத்தை நீக்குவதற்கும், பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் உதவுகிறது என்பது உண்மை. ஆனால், அதன் அதிகப்படியான பயன்பாடு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பெரும்பாலான மவுத்வாஷ்களில் ஆல்கஹால் உள்ளது, இது வாயை உலரச் செய்யும். வாய் வறட்சி, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக அமையும்.

ஆய்வுகளின்படி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு 55 சதவீதம் வரை சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மவுத்வாஷில் உள்ள சில இரசாயனப் பொருட்கள், உடலில் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்சுலின், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படும்போது, சர்க்கரை நோய் உருவாக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
அவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் தெரியுமா?
Mouth Wash

பிற பக்க விளைவுகள்:

  • சிலருக்கு மவுத்வாஷ் பயன்படுத்திய பிறகு வாயில் எரிச்சல் அல்லது வலி ஏற்படலாம்.

  • ஒரு சில மவுத்வாஷ்கள் பற்களில் கறைகளை ஏற்படுத்தக்கூடும்.

  • சில ஆய்வுகள், ஆல்கஹால் உள்ள மவுத்வாஷை அதிகமாகப் பயன்படுத்துவது வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன.

மவுத்வாஷை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷ்கள் வாயை உலர்த்தாமல் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். மருத்துவரின் அறிவுரைப்படி, ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறைக்கு மேல் மவுத்வாஷ் பயன்படுத்தக் கூடாது. எப்போதும், பல் துலக்கிய பிறகு, மவுத்வாஷ் பயன்படுத்துவது நல்லது. ஒருவேளை உங்களுக்கு வாய் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

இதையும் படியுங்கள்:
வாய் சுகாதாரத்தில் சூரியகாந்தி எண்ணெய்யின் ஆற்றல்மிகு பயன்பாடு!
Mouth Wash

மவுத்வாஷ், வாய் சுகாதாரத்திற்கு ஒரு துணைப் பொருளே தவிர, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளித்துவிடாது. சரியான பல் துலக்குதல், பல் இடவெளிகளில் சுத்தம் செய்தல் மற்றும் சீரான உணவுப் பழக்கம் ஆகியவை வாய் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. எனவே, மவுத்வாஷை அளவோடு பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com