இது அளவோடு இருந்தால் சமையலும் ருசிக்கும்; உடல் நலனும் சிறக்கும்!

Tamarind rice
Tamarind rice
Published on

ந்திய சமையலில் முக்கிய இடம் பிடித்திருப்பது புளி. சாம்பார், குழம்பு, ரசம், புளிக்குழம்பு என அனைத்திற்கும் ருசியைத் தருவதில் புளியின் பங்கு அதிகம். அத்துடன் ஆரோக்கியமும் தரும். ஆனால், உடலுக்கு நன்மை பயக்கும் புளியினை அளவோடு உபயோகப்படுத்தினால் மட்டுமே அது நன்மை பயக்கும். அதிக அளவு உட்கொள்ளும்போது ஏற்படுத்தும் பக்க விளைவுகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

புளியை ஏன் குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்: புளியை குறைவான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதன் வலுவான புளிப்புத் தன்மை மற்றும் அதன் தனித்துவமான சுவை சமையலில் சேர்க்கப்படும் மற்றொரு பொருட்களின் தனித்தன்மையை எளிதில் முறியடிக்கும். அதனால் உணவு சுவை இன்றிப்போகும். மேலும், புளியில் இயற்கையான அமிலங்கள் அதிகம். எனவே இது உணவின் அமைப்பையும் சுவையையும் பாதிக்கும்.

செரிமானக் கோளாறு: அதிக அளவில் புளியை பயன்படுத்தும்போது அது செரிமான சக்தியை பாதித்து செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே, சமையலில் புளியை அளவாக சேர்க்க வேண்டும்.

இரைப்பைக் கோளாறுகள்: புளியின் அதிக நுகர்வு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அதன் அமிலத்தன்மை காரணமாக வயிற்று வலிக்கு வழி வகுக்கும். குறிப்பாக, உணர்திறன் செரிமான அமைப்புகள் உள்ளவர்களுக்கு இது சிக்கல்களைத் தரும்.

பற்சிப்பி அரிப்பு: புளியில் உள்ள அமிலத்தன்மை அதிக அளவில் உட்கொள்ளப்படும்போது பற்சிப்பியை அரித்து பல் சிதைவிற்கும் உணர்திறனுக்கும் வழிவகுக்கும்.

இரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு: புளியை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் சரியான கண்காணிப்பு இல்லாமல் அதிகமாக புளி சேர்க்கப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளும்போது இரத்த சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்து விடும். அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.

சிறுநீரக ஆரோக்கியம்: புளியில் அதிக அளவு ஆக்சாலிக் அமிலம் உள்ளது. எனவே, இது அதிக அளவில் உட்கொள்ளும்போது சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
நிர்வாகத் தலைவருக்கு அவசியம் இருக்க வேண்டிய 10 குணங்கள்!
Tamarind rice

ஒவ்வாமை எதிர்வினைகள்: சிலருக்கு புளியினால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் சருமம் சம்பந்தப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். சரும வெடிப்பு, அரிப்பு மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கு வித்திடலாம்.

மருந்துகளுக்கான பக்க விளைவுகள்: நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்காக தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு அதிக அளவு புளியை சேர்க்கும்போது அவர்களுக்கு எதிர்பாராத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்கள் புளியை மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான நுகர்வு ஹார்மோன் அளவுகள் அல்லது கருப்பைச் சுருக்கங்களை பாதிக்கலாம்.

எனவே, புளியை மிகவும் குறைவாக உணவில் எடுத்துக்கொள்ளும்போது அது ஆரோக்கியத்தை தரும். அளவு மீறும்போது அது பக்க விளைவுகளை தருவதோடு சமையலின் ருசியையும் கெடுத்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com