
தற்போது உள்ள இளைஞர்கள் டயட் என்ற பெயரில் உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்க வேண்டும் என்று Intermittent fasting இருக்கிறார்கள். இதைப்போல 16 மணி நேரம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், அதனால் இறப்பு நேரும் அபாயம் கூட இருக்கிறது என்று சொல்வது உண்மையா? இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நாம் பொதுவாக மூன்று மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால், நம் கல்லீரலில் உள்ள சர்க்கரை குளுக்கோஸை, கிளைக்கோஜென் என்ற வடிவத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும். அதை நம் உடல் முதலில் எரித்து பயன்படுத்த ஆரம்பிக்கும். பிறகு நீங்கள் 12 முதல் 16 மணிநேரம் சாப்பிடாமல் இருக்கும் போது அந்த Glycogen காலியானதும் நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை எரித்து பயன்படுத்த தொடங்கும்.
தாவரங்கள் சூரிய வெளிச்சத்தில் இருந்து உணவை எடுத்துக் கொள்கிறது. மனிதர்களுக்கு ஒரு நாள் உணவு இல்லையென்றால் இறந்து விடுவார்கள் என்று வைத்துக் கொண்டால் இந்நேரம் மனித மற்றும் விலங்குகள் இனமே தோன்றியிருக்காது.
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வேட்டையாடி சாப்பிடும்போது மூன்று வேளையும் உணவுக் கிடைக்காது. எனவே, எப்போதெல்லாம் நம் உடலுக்கு எரிசக்தி கிடைக்கிறதோ அதை கொழுப்பாக சேமித்து வைத்துக் கொள்வதும், எப்போதெல்லாம் எரிசக்தி கிடைக்கவில்லையோ அப்போது இதை எரித்து எரிசக்தி கொடுக்க தான் கொழுப்பு இருக்கிறது.
Fasting இருக்கும் போது அந்த கொழுப்பு Beta oxidation மற்றும் ketosis மூலமாக ஆக்டிவேட் ஆகி எரிசக்தி கொடுக்க ஆரம்பிக்கும். நம்முடைய மூளைக்கும், கிட்னிக்கும் தேவையான குளுக்கோஸை கொழுப்பிலிருந்தும், புரதத்திலிருந்தும் Gluconeogenesis என்ற பிராஸஸ் மூலமாக லிவரே தயாரித்துக் கொள்ளும். நீங்கள் விரதம் இருக்கிறீர்கள் என்றால் சர்க்கரை அளவு பூஜ்யத்திற்கு போகாது. உடலுக்கு தேவையான குளுக்கோசை அதுவே தயாரித்துக் கொள்ளும்.
16 மணிநேரம் விரதம் இருப்பதால் உடனடியாக நீர்ச்சத்து குறைப்பாடு எற்படாது. பொதுவாக 72 மணி நேரம் விரதமும், சரியான நீர்ச்சத்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தான் பிரச்னை ஏற்படுத்தும். உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும், உப்பு சத்தும் உடலுக்கு கிடைத்து விட்டால், எந்த பிரச்னையும் ஏற்படுத்தாது.
16 மணி நேரம் விரதம் இருந்தாலே Electrolyte imbalance ஏற்படும் என்று சொல்வது தவறாகும். இருப்பினும் இது பெரும்பாலும் லேசானதாகவும், சமாளிக்கக்கூடியதாகவும் இருக்கும். நம் ஆரோக்கியத்திற்கு எந்த வித பாதிப்பும் வராமல் இருக்க முதலில் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு தொடங்குவது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)