உடற்பயிற்சி இதயத்துக்கு ரொம்ப நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும். இதய நோய் வராம தடுக்கவும், ஏற்கனவே இருக்குற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழி. ஆனா, ஒரு சந்தேகம் வரும், 'அதிகமா ஜிம்ல ஒர்க் அவுட் செஞ்சா இதயத்துக்கு ஏதாவது ஆபத்தா?'. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுங்குற மாதிரி, சில விஷயங்களை நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.
"அதிகம்"னா என்ன?
தினமும் மணிக்கணக்கா ஓய்வே இல்லாம உடம்ப ரொம்ப போட்டு வருத்திக்கிட்டு, உடம்புக்குத் தேவையான ஓய்வு கொடுக்காம பயிற்சி செய்யறதுதான் அதிகம். உங்க தசைகள், எலும்புகள் போல இதயமும் ஒரு தசைதான். அதையும் ஓய்வு இல்லாம அதிகமா வேலை செய்ய வச்சா, அது களைச்சுப் போகும். ஜிம் போன முதல் நாளே ரொம்ப தீவிரமா பயிற்சி செய்யறது, அப்புறம் வாரக்கணக்குல ஓய்வு இல்லாம டெய்லி போறதுன்னு இருந்தா, அது உடம்புக்கு நல்லதில்லை.
ரொம்ப கடுமையான பயிற்சிகளை செய்யறப்போ, இதயம் வழக்கத்தை விட அதிகமா வேலை செய்யணும். தொடர்ந்து அதிகப்படியான அழுத்தம் இதயத்துக்கு கொடுக்கப்படும் போது, சில நேரம், இதயம் ஓவரா வேலை செஞ்சு களைச்சுப் போக வாய்ப்பு இருக்கு. ரொம்ப அரிதான சில சமயங்கள்ல, கடுமையான பயிற்சி இதயம் துடிக்கிற வேகத்திலயோ, தாளத்திலயோ ஒரு சின்ன மாற்றத்தை கூட ஏற்படுத்தலாம். ஏற்கனவே இதய பிரச்சனை இருக்கிறவங்க, அல்லது வயசானவங்க இந்த மாதிரி அதிகப்படியான பயிற்சிகளை செய்யறப்போ கொஞ்சம் கவனமா இருக்கணும்.
முக்கியமான விஷயங்கள்: உடற்பயிற்சி செய்யறப்போ நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், தலைசுத்தல் மாதிரி ஏதாவது அசாதாரணமான அறிகுறிகள் தெரிஞ்சா, உடனே பயிற்சியை நிறுத்திடுங்க. உங்க உடம்பு உங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்குதுன்னு அர்த்தம். அப்புறம், உடற்பயிற்சிக்கு முன்னாடி வார்ம்-அப், அப்புறம் முடிக்கும்போது கூல்-டவுன் ரொம்ப முக்கியம். திடீர்னு அதிகமான பயிற்சியை ஆரம்பிக்காம, படிப்படியா அளவை கூட்டணும்.
தினசரி உடற்பயிற்சி செய்தது இதயத்துக்கு நல்லதுதான். ஆனா, அது ஒரு அளவோட இருக்கணும். உங்க உடம்புக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுக்கிட்டு, சரியான வழிகாட்டுதலோட பயிற்சி செய்யுங்க. ஓய்வு, சரியான உணவு, மற்றும் மிதமான உடற்பயிற்சி. இந்த மூணும் இருந்தா உங்க இதயமும் ஆரோக்கியமா இருக்கும், நீங்களும் ஃபிட்டா இருக்கலாம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)