
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஆனால் இன்று பலருக்கும் வெளியில் நடக்கச் செல்லுவது சிரமமாக இருக்கிறது. நேரம் கிடைக்காமல் போவதும், நடக்க நல்ல இடம் இல்லாமலிருப்பதும் காரணமாக இருக்கிறது.
மேலும், இளைஞர்கள் தினமும் மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், வேலைப் பளு, ஓய்வில்லாத வாழ்க்கை ஆகியவற்றால் சோர்ந்து போகிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கும் நேரமில்லை, வெளியே ஓடுவதற்கும் இடமில்லை.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், குறைந்தபட்சம் சில நிமிடங்கள் நம் உடலுக்காக செலவிட வேண்டியது மிக அவசியம். அதற்கான சிறந்த, எளிய வழியே இந்த 8 வடிவ நடைப்பயிற்சி. இது ∞ என்ற வடிவத்தில் நடப்பது போல இருக்கும். ஆங்கிலத்தில் இதனை இன்பினிட்டி வாக்கிங் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த நடைப்பயிற்சியை செய்ய அதிக இடம் தேவையில்லை. வீட்டின் மாடி, மண் தரை அல்லது குறைந்த அளவு இடம் இருந்தாலே போதுமானது.
இதை காலில் செருப்பு அணியாமல் மேற்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில், உடலில் உள்ள தேவையில்லாத தீமைகள் கால் வழியாக பூமிக்கு வெளியே செல்லும் என்று நம்பப்படுகிறது.
நடைப்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலை 5 மணி முதல் 7 மணி ஆகும். காலை இயலாவிட்டால், மாலை 6 மணிக்கு பிறகு செய்யலாம். உணவுக்குப் பிறகு செய்ய வேண்டுமென்றால், 45 நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின்பு நடக்க வேண்டும்.
தினமும் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். வடக்கு–தெற்கு திசையில் 15 நிமிடங்கள், தெற்கு–வடக்கு திசையில் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். விசாலமான இடம் இல்லையெனில், வீட்டிலேயே எட்டு வடிவத்தில் நடக்கலாம்.
நன்மைகள்:
ஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல் குறையும்
மூச்சுத் திணறல், சளி, மூச்சு அடைப்பு குணமாகும்
இதயக் கோளாறு குறையும்
கெட்ட கொழுப்பு கரைந்து, எடை குறையும்
மன அழுத்தம் குறைந்து, தூக்கத்தின் தரம் மேம்படும்
கண் பார்வை தெளிவாகும்
உடலின் ஆறு சக்கரங்களும் சீராக இயங்கும்
தலைவலி, மூட்டு வலி, குதிங்கால் வலி குறையும்
சர்க்கரை நோய் கட்டுப்பாடாகும்
சிறுநீரக மற்றும் தைராய்டு பிரச்சனைகள் சரியாகும்
கேட்கும் திறன் மேம்படும்
உடலின் இளமை நிலை நீடிக்கும்
தொடர்ந்து 20–30 நிமிடங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்தால், 10 முதல் 15 நாட்களில் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கும்.
யார் தவிர்க்க வேண்டும்?
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் தங்களின் கர்ப்பக்கலாம் முழுவதும் இந்த நடைப்பயிற்சியை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆறு மாதத்திற்கு பிறகு மருத்துவரின் உரிய ஆலோசனைக்கு பிறகே மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பல நன்மைகளை தரக்கூடிய இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை தினமும் மேற்கொண்டு நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.