நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு நீர் இன்றியமையாதது. உடல் வெப்பநிலையைப் பராமரிப்பது, கழிவுகளை வெளியேற்றுவது, செரிமானத்திற்கு உதவுவது என நீரின் பங்களிப்பு ஏராளம். ஆனால், அதிகப்படியான நீரும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, தினசரி 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அது குறித்த உண்மையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நம் உடல் சுமார் 60% நீரால் ஆனது. ஒவ்வொரு செல்லின் செயல்பாட்டிற்கும் நீர் அவசியம். நீர்ச்சத்து குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். போதுமான நீர் குடிப்பதால, உடல் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
"ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்பது பொதுவான கருத்து. ஆனால், இது அனைவருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, வாழ்க்கை முறை, காலநிலை போன்ற காரணிகளைப் பொறுத்து நீரின் தேவை மாறுபடும். ஒரு நாளைக்கு 1.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் போதுமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது சிலருக்கு நன்மை பயக்கும், சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.
நன்மைகள்:
அதிக வியர்வை வெளியேற்றும் நபர்கள் இது மிகவும் நல்லது.
வெப்பமான காலநிலையில் வசிப்பவர்கள் தாராளமாக நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
சிறுநீரக கற்கள் போன்ற சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களும் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது.
தீமைகள்:
சாதாரண உடல்வாகு கொண்டவர்களுக்கு அதிகப்படியான நீர் சிறுநீரகங்களின் மீது அதிக சுமையை ஏற்படுத்தும்.
"நீர் நச்சுத்தன்மை" (Water Intoxication) என்ற ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும். இது உடலில் சோடியம் அளவைக் குறைத்து, தலைவலி, வாந்தி, வலிப்பு மற்றும் சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.
தினசரி 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அனைவருக்கும் அவசியமில்லை. உங்கள் உடல் அமைப்பு, வாழ்க்கை முறை மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைப் பொறுத்து நீரின் தேவை மாறுபடும். போதுமான நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம் என்றாலும், அதிகப்படியான நீரும் தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் நீர்த்தேவையை அறிந்து, அதற்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்கவும்.