இத்தனை நாள் இதையா சாப்பிட்டீங்க? அச்சச்சோ! 

Mayonnaise
Mayonnaise
Published on

சாலட்டுகள், சாண்ட்விச்கள் மற்றும் பல உணவுகளுடன் வைத்து சாப்பிடும் ஒரு பிரபலமான சாஸ்தான் மேயனெய்ஸ் (Mayonnaise). இது முட்டை, எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சாப்பிட ருசியாக இருக்கும் இந்த சாஸ் உண்மையிலேயே நம் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமானதா? இந்த பதிவில் அதுகுறித்த முழு உண்மையைத் தெரிந்து கொள்வோம்.‌

மேயனெய்ஸ் ஒரு கொழுப்புச்சத்து நிறைந்த உணவு. இதில் முக்கியமாக கொழுப்பு அமிலங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் சில வைட்டமின்கள் உள்ளன. மேயனெய்ஸின் ஊட்டச்சத்து மதிப்பு அதில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, ஒரு ஸ்பூன் மேயனெய்ஸில் சுமார் 70 கலோரிகள் மற்றும் 8 கிராம் கொழுப்பு உள்ளது.‌

நன்மைகள்: மேயனெய்ஸில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட். மேலும், இதில் கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்கள் (A, D, E, K) உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. 

தீமைகள்: மேயனெய்ஸில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இது உடல் எடை அதிகரிக்கவும், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதில் கலோரி மதிப்பு அதிகமாக இருப்பதால் அதிக அளவில் உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக, மேயனெய்ஸில் இருக்கும் கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களை அடைத்து இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். சிலவகை மேயனெய்ஸில் சேர்க்கப்படும் சர்க்கரை, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும், சில மேயனெய்ஸ்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். 

இதையும் படியுங்கள்:
வெள்ளை உப்பு Vs பிங்க் உப்பு: எதில் அதிக நன்மைகள் தெரியுமா?
Mayonnaise

மேயனெய்ஸை மிதமான அளவில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதை பொதுவாக சாலட்டுகள், சாண்ட்விச்கள், காய்கறி சாலட் போன்ற உணவுகளில் சேர்த்து உட்கொள்ளலாம். இருப்பினும், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், இதற்கு மாற்றாக வேறு சிலவற்றையும் பயன்படுத்தலாம். 

க்ரீக் யோகர்ட் மேயனெய்ஸுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். இது புரதம் நிறைந்தது மற்றும் கொழுப்பு சத்து குறைவாகக் கொண்டது. அல்லது அவகடோவை நசுக்கி எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு சேர்த்து முற்றிலும் சுவையான ஒரு சாஸ் தயாரிக்கலாம். இது சாப்பிட மேயனெய்ஸ் போலவே இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com