அலாரத்தை அடிக்கடி Snooze செய்துவிட்டு தூங்குவது ஆரோக்கியமானதா?

Alarm snoozing in sleep
sleep
Published on

நம்மில் பலபேருக்கு காலையில் எழுந்திருக்க வேண்டும் என்பது முடியாத காரியமாகும். இரவு தூங்க செல்லும் போது அலாரம் வைத்து விட்டு தூங்கினாலும், காலையில் அந்த அலாரம் அடிக்கும் போது இரண்டு மூன்று முறை அதை snooze செய்துவிட்டு தூங்கி எழும் பழக்கம் இருக்கும். இது உண்மையிலேயே உடலுக்கு ஆரோக்கியமானதா? என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

இதுப்போன்று Snooze பட்டனை அழுத்திவிட்டு தூங்கும் போது நமக்கு கொஞ்சம் அதிகமாக தூக்கம் கிடைக்கிறது. இதனால் அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், அது தவறான விஷயமாகும். ஆராய்ச்சிகளில் என்ன தெரிய வந்திருக்கிறது என்றால், இதுப போல் செய்யும் போது தான் அவர்களுக்கு சோர்வு மிகவும் அதிகமாகிறது என்று சொல்லப்படுகிறது. சோர்வு, குழப்பம், டிப்ரஷன், தூக்கம் கெடுதல் போன்றவை ஏற்படுவதாக கண்டுப்பிடித்துள்ளனர்.

நாம் தூங்கும் போது Sleep cycle என்று ஒன்று நடக்கிறது. நாம் 7 முதல் 8 மணி நேரம் தூங்குகிறோம் என்றால், கிட்டத்தட்ட 4 முதல் 6 Sleep cycle நடக்கும். ஒவ்வொரு சைக்கிளும் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் நடக்கும்.

இப்படி தூக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு சைக்கிளிலும் 4 Stages இருக்கும். இதில் முதலாவதாக NREM sleep ஆகும். இதில் N1 ஸ்டேஜில் நம்முடைய எலும்புகள் சற்று தளர்வாக இருக்கும். இந்த நிலையில் மற்றவர்கள் நம்மை சுலபமாக எழுப்பிவிட முடியும்.

இதிலேயே அடுத்த N2 ஸ்டேஜில் நம்முடைய உடலின் வெப்பநிலை சற்று குறையும், இதய துடிப்பு சற்று மெதுவாகும், நம்முடைய நினைவாற்றலை நம் மூளை Process செய்துக் கொண்டிருக்கும். அடுத்து N3 ஸ்டேஜ்ஜில் சற்று ஆழ்ந்த தூக்கம் ஏற்படும். இந்த நேரத்தில் தான் உடலில் உள்ள Growth hormones சுரக்கும், உடலில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்துக் கொள்ளும். இந்த தூக்கத்தில் தான் Immunity உடலில் அதிகரிக்கும்.

அடுத்தது REM sleep என்று சொல்வார்கள். இதில் தான் மூளை நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும். நமக்கு கனவுகள் வரும். மூளை கிரியேட்டிவாக யோசித்துக் கொண்டிருக்கும். இதெல்லாம் இந்ந REM sleep ல் நடக்கும். இவை அனைத்துமே நம் உடலுக்கு தேவையானது. இவை அனைத்தும் நடந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒருநாளைக்கு 8 மணி நேரம் தூங்கும் போது இதுபோன்று 4 முதல் 6 சைக்கிள்கள் நடைப்பெறும்.

சரி இப்போது Snooze பட்டனை அழுத்திவிட்டு குட்டி தூக்கம் போடும் போது என்ன நடக்கும் தெரியுமா? இதை Fragmented light sleep என்று சொல்வார்கள். ஒரு சைக்கிள் என்பது கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் இருக்கும் என்று பார்த்தோம். ஆனால், இதுப்போன்று சிறிது நேரம் தூங்கி தூங்கி எழுவது முதல் Stage of sleep ஐ திரும்ப திரும்ப தூங்குவதுப்போல ஆகிவிடும்.

இது sleep inertia என்ற பிரச்னையை அதிகமாக்கும். இதனால் மனச்சோர்வு, மனகுழப்பம் அதிகமாகிறது என்று ஆராய்ச்சியில் தெளிவாக நிரூபணம் ஆகிறது.

இதுப்போன்று அடிக்கடி Snooze வைத்து தூங்குபவர்களாலே தெளிவான முடிவை காலையில் எடுக்க முடிவதில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் நம் ஹார்மோனும் குளறுபடியாகிவிடும். நாம் விழித்திருக்கும் போது Melatonin ஹார்மோனும், தூங்கும் போது Cortisol ஹார்மோனும் சமநிலையில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
Ice cream Vs frozen dessert : விழித்திடுங்கள் மக்களே! உண்மை அறிந்து உண்ணுங்கள்!
Alarm snoozing in sleep

ஆனால், Snooze செய்து தூங்கும்போது Cortisol ஹார்மோனின் Effect குறைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதிகமாக Snooze பட்டனை அழுத்தி தூங்குபவர்களுக்கு போதிய நேரம் தூக்கமில்லை.

இரவு லேட்டாக தூங்குவதால் போதிய தூக்கம் இல்லாத காரணத்தால் Snooze பட்டனை அழுத்திவிட்டு தூங்குகிறோம். இந்த பிரச்னையை சரிசெய்ய முதலில் தேவையான தூக்கம் வேண்டும். ஒருநாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் வேண்டும். ஒரே அலாரம் வைத்து அதில் எழுந்திருக்க முயற்சிக்கவும். Snooze பட்டனை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில் ஒரே நேரத்தில் எழுந்திரிக்க முயற்சியுங்கள்.

இதையும் படியுங்கள்:
shocking! இறப்பிற்கு பின் எங்கே செல்வோம்? இந்த நம்ப முடியாத கதையை கேளுங்கள்!
Alarm snoozing in sleep

காலையில் எழுந்ததும் சூரிய வெளிச்சம் நம் மீதுபடுவது போல நின்றால் Melatonin அளவுகள் குறைந்து சுறுசுறுப்பு வந்துவிடும். தூங்குவதற்கு முன்பு போனை பார்த்துவிட்டு தூங்காதீர்கள். அதுவும் தூக்கத்தை கெடுக்கக்கூடும். இந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே Snooze பட்டனை அழுத்த வேண்டியதில்லை. காலையில் எழுந்து சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com