மழைநீர்... அமுதமா? ஆபத்தா? - நீங்கள் அறிந்திராத உண்மைகள்!

நிறைய பேருக்கு மழை நீரை குடிக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான விடையை இங்கே பார்க்கலாம்.
Rain water | மழைநீர்
Rain water | மழைநீர்
Updated on

நீர் என்பது ஏறக்குறைய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாகும். சொல்லப்போனால், மனித உடல் சுமார் 60 சதவீதம் நீரால் ஆனது. வியர்வை மற்றும் கழிவு வெளியேற்றம் போன்ற பல்வேறு இயற்கையான உயிரியல் செயல்பாடுகள் மூலம் உங்கள் உடல் நீரை இழக்கிறது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, இழந்த நீரை ஈடுசெய்யவும், உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் சீராகவும் வைக்க உதவுகிறது.

பொதுவாக குழாய், கிணறு, ஊற்று, ஆறு அல்லது பாட்டில் இருக்கும் குடிநீரையே அனைவரும் குடிக்கின்றனர். ஆனால் மழைநீரைக் குடிப்பது பாதுகாப்பானதா என்று நீங்கள் யோசிக்கலாம்.

மழைநீர் பாதுகாப்பு:

அதேபோல் நிறைய பேருக்கு மழை நீரை குடிக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும். மழைநீர் சுத்தமாக இருக்கும் பட்சத்தில், அதைக் குடிப்பதில் எந்தவித ஆபத்தோ அல்லது தவறோ இல்லை. ஆனால் நேரடியாக மழை நீரை குடிப்பது பாதுகாப்பானது அல்ல என்றே கூறப்படுகிறது. காற்றில் உள்ள நச்சுப் புகை, தூசு, மற்றும் கூரைகளில் படிந்திருக்கும் கிருமி போன்ற காரணங்களால் அது மாசடைகிறது.

Rain water | மழைநீர்
Rain water | மழைநீர்AI Image

கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் ஆவியாகி விண்ணுக்கு செல்கிறது. இந்த நீர் ஆவியாகும் போது உப்புகள், கனிமங்கள், பெரும்பாலான கிருமிகள் கீழே தான் இருக்கும். தூய நீராவி மேலே சென்று மேகமாக மாறுகிறது. இதனால் புதிதாக உருவாகும் மழைத்துளிகள் மிகவும் தூய்மையாக இருக்கும்.

அதேவேளையில் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும் வழியில் மழைத்துளிகள் காற்றின் வழியாக கீழே வரும்போது தூசி, புகை, மகரந்த துகள்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள், வாகன மற்றும் தொழிற்சாலை மாசுக்கள் போன்றவற்றை ஈர்க்கிறது.

தொழிற்சாலை புகை மற்றும் வாகனப் புகையால் மழை நீர் நச்சுத் தன்மையைப் பெறுகிறது. அதனால் நகரங்களில் பெய்யும் மழை நீர், காடுகளில் பெய்யும் மழை நீரை விட குறைந்த தூய்மையாக இருக்கும்.

Rain water | மழைநீர்
Rain water | மழைநீர்AI Image

மழை தான் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. அதனால் தான் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்ட வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டி நேரடியாக நிலத்திற்குள் விடும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கி இருக்கிறார்கள்.

நகரங்களில் மழை பெய்யும்போது அந்த மழைநீரை சேகரிக்கும் போது அதில் தூசி அதிகமாக இருக்கும். வீட்டுக்கூரையில் பறவைகளின் கழிவு, இலைகள், மண் ஆகியவை தேங்கி இருக்கும். கூரை மற்றும் தொட்டிகளில் உள்ள தூசு, பறவை எச்சம் மூலம் கிருமிகள் நீரில் கலக்கின்றன.

இவை மழை பெய்யும் போது மழை நீருடன் சேர்ந்து வரும். அதனால் முதல் மழை நீரை சேகரிக்காமல் விடுவது நல்லது. அதன் பின்னர் சேகரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மீன் மழை: அமானுஷ்யமா? அறிவியலா?
Rain water | மழைநீர்

அதாவது, முதல் மழை நீரை விட்டுவிட்டு, அதன்பிறகு சேமிக்கப்பட்ட நீரையும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வைத்திருந்து அதன்பிறகே பயன்படுத்த வேண்டும். மழைநீராக இருந்தாலும் 5 நாட்களுக்கு பிறகு அதில் நுண்ணுயிரிகள் வளர ஆரம்பிக்கும் என்பதால் 5 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

அதுமட்டுமின்றி மழை நீரை சேகரித்தாலும் நேரடியாக குடிக்கக்கூடாது. மழை நீரை சுத்தமான பாத்திரத்தில் பிடித்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிய பிறகு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது சரியான முறையில் சுத்திகரிப்பு செய்த பிறகு பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

பொதுவாக மழைநீரை தோட்டச்செடிக்கு பாய்ச்சலாம். நிலத்தடி நீரை உயர்த்த பயன்படுத்தலாம். ஆனால் குடிநீராக பயன்படுத்த முறையான சுத்திகரிப்பு அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.

நிலத்தடி நீரில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவையும் கூட்டுத் தனிமங்களான குளோரைடு, கார்பனேட், சல்பேட் போன்றவையும் இருக்கின்றன. ஆனால் மழைநீரில் தனிமங்கள் இல்லை என்றபோதிலும் அது சுத்தமானது.

மேலும், அறிவியல் ஆய்வுகளின்படி, மழைநீர் மென்மையானது, குளோரின் இல்லாதது, குறைந்த உப்புச்சத்து கொண்டது என்பதால் தாவரங்கள் வளர மழைநீர் நன்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மழைநீர் சேமிப்பு தெரியும்; மழைநீர் அறுவடை தெரியுமா?
Rain water | மழைநீர்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com