ஜிம் பக்கம் போகாமலேயே இரும்பு மாதிரி உடம்பை ஏற்றிய IShowSpeed.. அந்த வைரல் ரகசியம் இதோ!

iShowspeed
iShowspeed
Published on

உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்குச் செல்ல வேண்டும் என்றாலே பலருக்கும் பெரிய சோம்பேறித்தனம் வந்துவிடும். நேரமில்லை என்ற சாக்குப்போக்கு சொல்லி உடம்பை கெடுத்துக் கொள்வார்கள். ஆனால், உலக அளவில் பிரபலமான இணையதளப் பிரபலம் ஐஷோஸ்பீட் (IShowSpeed) ஜிம்முக்கே போகாமல் உடம்பை இரும்பு மாதிரி மாற்றி இருக்கிறார். 

அவர் சமீபத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு மிகச் சாதாரணமான ஃபிட்னெஸ் ரகசியம் தான் இப்போது இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. எந்த ஒரு விலையுயர்ந்த உபகரணங்களும் இல்லாமல், ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்க்க விறுவிறுக்கக் கஷ்டப்படாமல் அவர் எப்படி இவ்வளவு ஸ்ட்ராங் ஆனார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பாத்ரூம் ட்ரிக்!

ஸ்பீட் சொல்லும் அந்த ரகசியம் ஆரம்பத்தில் கேட்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாகத் தான் இருக்கும். நாம் தினமும் ஒரு ஐந்து முறையாவது இயற்கை உபாதைகளைக் கழிக்கப் பாத்ரூம் செல்வோம். அப்படி பாத்ரூம் செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு பத்து Pull-ups எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது மாஸ்டர் பிளான். 

ஒரு நாளைக்கு ஐந்து முறை சென்றால், மொத்தமாக ஐம்பது புல்-அப்ஸ் கணக்கிற்கு வந்துவிடும். ஒரே மூச்சில் ஐம்பது முறை செய்வது மிகவும் கடினம், ஆனால் இப்படி பிரித்துச் செய்யும்போது உடலுக்கு எந்த ஒரு பெரிய சோர்வும் ஏற்படாது. இந்த ஒரு பழக்கத்தால் தான் தான் இவ்வளவு வலிமையாக மாறியதாக அவர் கூலாகக் கூறுகிறார்.

ஹாபிட் ஸ்டாக்கிங்!

இதைத்தான் ஃபிட்னெஸ் எக்ஸ்பெர்ட்கள் ஹாபிட் ஸ்டாக்கிங் (Habit Stacking) என்று சொல்கிறார்கள். அதாவது, நாம் தினமும் கட்டாயம் செய்யும் ஒரு வேலையோடு, புதிதாக ஒரு நல்ல பழக்கத்தையும் இணைத்து விடுவது. நாம் பாத்ரூம் செல்வது என்பது தவிர்க்க முடியாத ஒரு அன்றாட செயல் என்பதால், அதுவே நமக்கு புல்-அப்ஸ் செய்வதற்கான அலாரமாக மாறிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
ஐம்பது வயதை நெருங்கி விட்டீர்களா? அப்ப அலர்ட்டா இருங்க!
iShowspeed

இந்த ஐம்பது புல்-அப்ஸ் நமது முதுகு, தோள்பட்டை மற்றும் கைகளை வலுவாக்குகிறது. ஜிம்மிற்குப் போய் கடினமாக உழைக்க நேரமில்லை என்று சொல்வோருக்கு இது ஒரு மிகச் சிறந்த பிராக்டிக்கலான ஐடியாவாக அமையும்.

ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான டிப்ஸ்!

இதைப் படிக்கும் பலருக்கும் புல்-அப்ஸ் செய்வது கஷ்டமான காரியமாகத் தோன்றலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் புல்-அப்ஸிற்குப் பதிலாகத் தரையில் அல்லது சுவரில் சாய்ந்து Push-ups செய்யலாம் அல்லது உதவிக்கு ஒரு ஸ்டூல் வைத்துக்கொண்டு மெதுவாகப் பழகலாம். முதல் நாளிலேயே பெர்ஃபெக்ட்டாகச் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. தினமும் இந்த பயிற்சியைத் தவறாமல் ஒரு தொடர் பழக்கமாகச் செய்வது மட்டுமே இங்கு மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
ஜிம்முக்கு டாட்டா சொல்லுங்க... வியர்க்காமலேயே உடம்பை குறைக்கலாம்... எப்படின்னு பாருங்க!
iShowspeed

உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் எப்போதுமே பெரிய பெரிய ஜிம் உபகரணங்களோ அல்லது கடினமான டயட் முறைகளோ தேவையில்லை. ஐஷோஸ்பீட் சொல்லும் இந்த சின்ன விஷயத்தை உங்களின் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நாளடைவில் உங்களுக்கே உங்களின் உடலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் தெரிவது உறுதி.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com