Body building Tips
Body building Tips

இந்த ஒரு விஷயத்தை செஞ்சா போதும்... உங்க உடம்பு 'அர்னால்ட்' உடம்பா மாறிடும்!

Published on

ஆண்கள் அனைவருக்கும் தங்களது உடல் அமைப்பு மேல் எப்பொழுதுமே அதீத கவனம் கொள்வர். ஒல்லியாகவும் இருக்கக்கூடாது. அதே சமயம் குண்டாகவும் இருக்கக்கூடாது. தசை வலிமைகள் முழுமையாக இருக்க வேண்டும், தொப்பை இருக்கக் கூடாது. ஆனால், கட்டுமஸ்தான உடல் கட்டு வேண்டும் என ஆண்களுக்கு தங்கள் உடல் அமைப்பு குறித்து பல நிபந்தனைகள்  உண்டு.

பொதுவாக உடல் அமைப்பு மீசோமார்ஃப் (Mesomorph), எண்டோமார்ஃப் (Endomorph), எக்டோமார்ஃப் (Ectomorph) என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தடகள பயிற்சி வீரர் போன்ற அகன்ற தோள்கள் குறுகிய இடுப்பு தசை கைகள் மற்றும் கால்கள் என வலிமை கொண்ட உடலமைப்பு மீசோமார்ஃப் எனவும், சற்று பூசினாற் சதையுடன், அகலமான இடுப்பு மற்றும் தொடைகள் என பேரிக்காய் வடிவ உடலமைப்பு எண்டோமார்ஃப் எனவும் ஒல்லியான தேகத்துடன் குறுகிய தோள்கள், நீண்ட கால்கள், மேலும் சதைப் பிடிப்புக்கான தேடலுடன் கூடிய உடலமைப்பு எக்டோமார்ஃப் எனவும் கூறப்படுகிறது.

இதில் மற்ற இரண்டு வகையினரை விட ஒல்லியான உடலமைப்பு கொண்ட எக்டோமார்ஃப் நபர்கள் இதில் ஒல்லியான நபர்கள் தாங்கள் என்ன செய்தாலும் சதை ஏறவில்லை என கவலையில் இருப்பார்கள். தங்கள் உடல் அமைப்பு குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்தெந்த வழியில் தங்கள் உடலில் தசைப் பிடிப்பை ஏற்றலாம் என்பது குறித்தான சில தகவல்கள் இங்கு. 

எடை அதிகரிக்கும் வழிகளில் முதலிடம் பிடிப்பது உணவு. எடை அதிகரிக்க அதிக கலோரிகளை உட்கொள்ள வேண்டியிருக்கலாம். 'நான் நிறைய சாப்பிடுகிறேன். ஆனால், எடை அதிகரிக்க வில்லை' என புலம்புபவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் உணவு வகைகள் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய மேக்ரோநியூட்ரியண்ட் சமநிலையுடன் இருப்பது அவசியம்.

தசை வளர்ச்சிக்கு உதவும் புரதம் நிறைந்த முட்டை, மீன் போன்றவைகளும் உடலுக்கு ஆற்றல் தரும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கிய முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவைகளும், தசை வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும். ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ள கொட்டைகள், விதைகள், வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவைகளும் உங்கள் உணவுகளில் இடம் பெறுவது அவசியம்.

குறிப்பாக காலை, மதியம், இரவு உணவுகளில் வெறும் கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட அரிசி வகை உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்த்து அதனுடன் இந்த சத்துக்கள் முழுமையும் அடங்கிய உணவுகளாக பிரித்து உண்ணலாம்.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுடன் குறைந்த கலோரியுடன் நிறைந்த சத்துக்கள் தரும் பனீர், சோயாசங்ஸ், முட்டை, ஈவ்னிங்  தோலுடன் கூடிய பழங்களை அரைத்த தேன் கலந்த ஜூஸ், இரவு கெட்டித் தயிர் கலந்த ஓட்ஸ், பீனட் பட்டர் போன்றவைகள் இடம் பெற்றால் எடை  அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
புத்திசாலிக் குழந்தை வேண்டுமா? கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டியவை!
Body building Tips

இவைகளுடன் தரமான துணை உணவு எனப்படும் சப்ளிமெண்டுகளையும் தகுந்த ஆலோசனை பெற்று எடுக்கலாம்.
வெறுமனே சத்தான உணவுகளை சாப்பிட்டு இயங்காமல் இருந்தால் எடை கூடுவதுடன் தொப்பை விழவும் வாய்ப்பு உண்டு. எனவே, தகுந்த உணவுகளுடன் முறையான உடற்பயிற்சி இயக்கங்கள் அவசியம் தேவை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
அளவுக்கு மீறினால் தூக்கமும் விஷமே! உஷார்!
Body building Tips

முக்கியமானது ஒல்லியாக இருக்கிறோம் எனும் மனக்கவலை இருந்தால் நீங்கள் என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாது. ஆகவே, பதட்டம் கவலை தவிர்த்து இருப்பது அவசியம். எனவே, உங்கள் உடல் வகையைப் புரிந்துக் கொள்வதன் மூலம், உங்கள் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தைப் பற்றி நிபுணர் ஆலோசனையுடன் பின்பற்றலாம். இது உடல் எடை அதிகரிக்க மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த வழிவகுக்கும். 

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com