ஷ்இந்த அவசர உலகில் இதய நோய் என்பது மிகவும் சாதாரணமாக வயது வரம்பின்றி எல்லோருக்கும் வரக்கூடிய நோயாக உள்ளது. எனவே, இதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றம் செய்வது அவசியமாகும். இதயத்தை பலப்படுத்த குடிக்க வேண்டிய 6 பானங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. மாதுளைப்பழ ஜூஸ்: மாதுளைப்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சிறந்த பழமாகக் கருதப்படுகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய இரத்தக்குழாய் குறுகுவதை தடுக்கிறது. மேலும், மாதுளைப்பழ ஜூஸ் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
2. காபி: தினமும் 3 முதல் 5 கப் காபி குடிப்பவர்களுக்கு இதய நோய், ஸ்ட்ரோக், இதயம் செயலிழப்பது போன்ற பிரச்னைகள் வராது என்று சொல்லப்படுகிறது. காபியில் இருக்கும் கேப்பினின் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள்தான் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
3. டீ: டீயில் Photo nutrients ஆன Flavonoids உள்ளது. இது இதய இரத்தக்குழாயில் வீக்கம் வராமல் தடுக்கும். பிளாக் டீ மற்றும் கிரீன் டீயில் காபியை காட்டிலும் அதிக Caffeine உள்ளதால் அதற்கு மாற்றாக டீயை விரும்புவோர் இதை எடுத்துக்கொள்ளலாம்.
4. தக்காளி ஜூஸ்: தக்காளி ஜூஸில் உள்ள வைட்டமின் மற்றும் மினரலுக்கு இதய சம்பந்தமான நோயை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் உள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை தக்காளியில் இருப்பதால் அது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அதிக சோடியத்தை இரத்தத்திலிருந்து நீக்குகிறது. தக்காளியில் Lycopene என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது இதய இரத்தக்குழாயை வலுப்படுத்த உதவுவது மட்டுமில்லாமல், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது.
5. கிரீன் ஜுஸ்: காய்கறிகள் சாப்பிட விரும்பாதவர்கள் அதைப் பழங்களோடு சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பது இதயத்திற்கு மிகவும் நல்லது. கீரைகள், Kale, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் இருக்கும் Flavonoids இதய இரத்தக்குழாய் வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
6. ஸ்மூத்தீஸ்: அடர்த்தியான நிறத் தோல்களைக் கொண்ட பழங்களான Blueberry, pomegranateல் ஸ்மூத்தீஸ் செய்து குடிப்பது இதயத்திற்கு நல்லதாகும். கீரைகள் மற்றும் சியா விதைகளில் அதிக அளவு Omega 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதாகும். இந்த 6 பானங்களையும் குடித்து இதயத்தை பலப்படுத்துங்கள்.