மலச்சிக்கலா? இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகமா? வெள்ளை அரிசிக்கு குட்பை சொல்லுங்க!

கைக்குத்தல் அரிசி என்பது நெல்லின் முழுதோலையும் நீக்காமல் வெளிப்புறத் தோலை மட்டும் மென்மையாகக் குத்தி நீக்கப்பட்ட அரிசியாகும்
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசி
Published on

தென்னிந்தியாவில் அன்றாட உணவில் அரிசியானது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியினை வெகுவாகப் பயன்படுத்தி வந்தார்கள். கைக்குத்தல் அரிசியானது சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நம் முன்னோர்கள் மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

கைக்குத்தல் அரிசி என்பது நெல்லின் முழுதோலையும் நீக்காமல் வெளிப்புறத் தோலை மட்டும் மென்மையாகக் குத்தி நீக்கப்பட்ட அரிசியாகும். ஆலைகளில் இயந்திரங்களின் மூலமாக நெல்லை அரைத்தால் அது அரிசியின் மேலுள்ள அனைத்து தோலையும் நீக்கி எடுத்து விடும். இதனால் அரிசியானது பார்ப்பதற்கு வெண்மையாகக் காட்சியளிக்கும். ஆனால் கைக்குத்தல் அரிசி என்பது பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும். தோலை முழுமையாக நீக்காததால் சத்துக்கள் அரிசியிலேயே நிறைந்திருக்கும்.

தவிடு நீக்கப்படாத கைக்குத்தல் அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீஸ், பொட்டாசியம், மெக்னீசியம் என பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதையும் படியுங்கள்:
கைக்குத்தல் அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் பயன்களும்!
கைக்குத்தல் அரிசி

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து அதிக அளவில் உள்ளது. விளையும் அரிசியானது இரண்டு அல்லது மூன்று முறை இயந்திரத்தால் பாலீஷ் செய்யப்படுகிறது. இதனால் அரிசி வெண்மையான நிலையை அடைகிறது. ஆனால் அதிலுள்ள முக்கியமான சத்துக்கள் வீணாகின்றன. இத்தகைய அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலில் மாவுச்சத்து அதிகப்படியாகச் சேர்கிறது. சர்க்கரை நோய் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையக்கூடும்.

கைக்குத்தல் அரிசியானது எளிதில் ஜீரணமடையும் தன்மை கொண்டது. எனவே இதை சிறுவர் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை சரியாக்குகிறது. மலச்சிக்கல் இல்லாத உடல் ஆரோக்கியமான உடல். தற்காலத்தில் முதியோர் மட்டுமின்றி இளம்வயதினருக்கும் மலச்சிக்கல் பிரச்சினை அதிகமாக உள்ளது. உடலுக்கு ஒவ்வாத நார்ச்சத்து இல்லாத உணவுகளை அதிக அளவில் இன்றைய இளைஞர்கள் விரும்பிச் சாப்பிடுவதே இதற்கு முக்கியமான காரணியாகும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி மிக்கது. மேலும் இது பித்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பையும் கரைக்கும் தன்மை கொண்டது. நமது உடலில் வாதம் பித்தம் கபம் போன்றவை சரியான விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும்.

இவை மாறுபடும் போது உடலில் வியாதிகள் தோன்றும். இந்த மூன்றையும் சரியான விகிதத்தில் வைக்கும் சக்தி கைக்குத்தல் அரிசிக்கு உண்டு.

செலினியம் என்ற பொருள் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதை அறவே தடுக்கும் ஒரு பொருளாகும். மேலும் இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால் இதுவும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே உள்ளன என்றும் கூறப்படுகிறது.

கைக்குத்தல் அரிசித் தவிட்டிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் உண்டு. இந்த அரிசியானது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதும் உடல் எடையினை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் உதவும் என்பதும் ஆராய்ச்சிகளின் வாயிலாக நிரூபணமாகியுள்ளது. இதில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளதால் எலும்புகள் வலுவாகும்.

இதையும் படியுங்கள்:
கை கொடுக்கும் கைக்குத்தல் அரிசி! எப்படி?
கைக்குத்தல் அரிசி

முன்னர் தமிழ்நாட்டில் கைக்குத்தல் அரிசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மிகக்குறைந்த அளவிலேயே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இலங்கையிலும் கேரளாவிலும் இந்த கைக்குத்தல் அரிசி அதிக அளவில் பயன்படுகிறது. தற்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் தவிடு நீக்கிய வெண்மையான அரிசியையே அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு எந்த விதமான பயனையும் தராது. அரிசியை தவிடு நீக்காமல் அப்படியே சமைத்துச் சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசி தற்காலத்திலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com