கற்பூரவல்லியின் கலக்கல் பயன்கள் பற்றி தெரியுமா?

கற்பூரவல்லி இலைச்சாறு
கற்பூரவல்லி இலைச்சாறுhttps://agriculturetrip.com
Published on

த்தியத் தரைக்கடல் உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபல மூலிகையான ஆர்கனோ, தமிழில் கற்பூரவல்லி என்று அழைக்கப்படுகிறது. இது பலவிதமான அறிவியல் ரீதியான ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கற்பூரவல்லியின் கலக்கல் பயன்கள்:

1. ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தவை: கற்பூரவல்லியில் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் தைமால் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. இவை உடலில் உள்ள செல்களின் சேதத்தை தடுக்கிறது. நாள்பட்ட அழற்சியை குறைப்பதற்கும் இதய நோய் மற்றும் சில புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் இது பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

2. பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள்: இந்த இலைகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும் பல நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதால் தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

3. கொலஸ்ட்ராலை குறைக்கிறது: இது கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது. மேலும், நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

4. குடல் ஆரோக்கியம்: கற்பூரவல்லி பித்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம்  குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் செரிமான அமைப்பு மிகவும் முக்கியம். அந்த முக்கியமான வேலையை கற்பூரவல்லி நன்றாகவே செய்கிறது. காலையில் வெறும் வயிற்றில் கற்பூரவல்லி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

5. எடை மேலாண்மை: கற்பூரவல்லி இலையின் சாறு வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதன் மூலம் எடையை சரியாக நிர்ணயிக்க உதவும். மேலும், இது மாதவிடாய் வலியை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் தொப்பையை கரைக்க என்ன செய்யலாம்?
கற்பூரவல்லி இலைச்சாறு

6. சளி மற்றும் இருமலை நீக்கும்: கற்பூரவல்லி இலையின் சாறை வெந்நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து குடித்து வந்தால் சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

7. கற்பூரவல்லி தேநீர்: கற்பூரவல்லி இலைகளை காய வைத்து பொடி செய்து டீ தயாரித்து குடிக்கலாம். இது ஒரு இனிமையான மற்றும் ஆரோக்கியமான பானம் ஆகும். கற்பூரவல்லியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இது ஒரு சமச்சீர் மற்றும் சத்தான உணவுக்கு வழிவகுக்கும்.

8. ஒவ்வாமை: சில நபர்களுக்கு கற்பூரவல்லி ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். புதினா, துளசி போன்ற பிற மூலிகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவரை கேட்டுக்கொண்டு இதை எடுத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com