பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் தொப்பையை கரைக்க என்ன செய்யலாம்?

பெண்கள் வயிற்றுத் தசையை குறைக்கு வழி
பெண்கள் வயிற்றுத் தசையை குறைக்கு வழி
Published on

பிரசவத்துக்கு முன் ஒரு பெண் தனது உடல் மீது நன்கு கவனம் செலுத்தி அதை பராமரித்து வருகிறாள். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு அப்பெண்ணின் உடலில் பலவிதமான மாறுதல்கள் ஏற்படுகின்றன. அதற்குக் காரணம் உடலைப் பராமரிப்பதற்கான நேரமின்மைதான். அதிலும் குறிப்பாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது வயிற்றுப் பகுதிதான்.

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு வயிற்றுப் பகுதி தசைகள் மிகவும் தளர்ந்து காணப்படும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு தகுந்தாற்போல் தசைகள் நீட்சி அடைவதால் இப்படி ஏற்படுகிறது. இதை சில வீட்டுக்குறிப்புகள் மூலம் நம்மால் சரி செய்ய முடியும்.

குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல. அதற்காக பெண்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிறகு அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. ஆனால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்திற்குப் பிறகு அவர்கள் சில கஷ்டங்களை சந்திக்கின்றனர். உடல் ரீதியாகப் பார்த்தால் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிற்றுப்புற தசைகள் இறங்க ஆரம்பித்து விடும்.

உடலழகுக்கு என்று அவர்களால் நேரம் செலவிட முடியாது. என்னதான் பெல்ட் போட்டுக் கொண்டாலும் இறுக்கமான பெல்ட்டால் வயிறு வலிக்கும். இதை அசெளகரியமாகவும் பெண்கள் உணர்வர். சரி, உடற்பயிற்சி செய்யலாம் என்றால் குழந்தையை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். இந்த வயிற்றுப்புற தசைகளைக் கண்டு பெண்கள் அதிகம் வருதப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கடைபிடிக்க எளிதான சில வீட்டுக் குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம் அம்மன் கோயில்களில் நடைபெறும் சில விசேஷ வழிபாடுகள்!
பெண்கள் வயிற்றுத் தசையை குறைக்கு வழி

பிரசவத்திற்குப் பிறகான தளர்வான தசையை இறுக்க முதலில் நீங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சரிவிகித உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தளர்வான தசையை இறுக்க கொலாஜென் அவசியம். சரும செல்கள் ஆக்ஸிஜனேற்ற பாதிப்புகளிலிருந்து தடுக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின் ஈ, ஏ, சி, ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய இலவங்கப்பட்டை, ஆர்கனோ, இஞ்சி, பூண்டு, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களுடன், பழங்கள், காய்கறிகள் போன்ற லிபோயிக் அமிலம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம். இது தளர்வான தசையை இறுக்கும். பால், சீஸ், தயிர், முட்டை, சோயா, பீன்ஸ், பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த அமினோ அமில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இதுபோன்ற உணவுப் பழக்க வழக்கங்கள் பிரசவத்திற்குப் பிறகு உண்டாகும் வயிறு பெரிதாவதைக் குறைத்து, இடுப்பை சுற்றி உள்ள தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து, உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றது. இதனால் உடல் எடை கூடுவதையும் தவிர்த்து பெண்களுக்கு சிறந்த பலனைத் தருகின்றது. இந்த உணவுப் பழக்க வழக்கங்களோடு, கொஞ்சம் உடற்பயிற்சி போன்றவையும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும்.

மேற்கண்ட ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதோடு, காலையில் மூச்சுப் பயிற்சி செய்வதாலும் நிச்சயமாக பழைய அழகான உடலை பெண்களால் மீட்டெடுக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com