

கருங்குறுவை அரிசி (Karunguruvai rice) பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள பழமையான அரிசி வகையாகும். இதன் தோல் மற்றும் அரிசி நிறம் கறுப்பு நிறத்தில் இருப்பதால் இப்பெயர் வந்தது. இந்த அரிசியில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, B, B12 போன்ற சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளன.
கருங்குறுவை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்:
கருங்குறுவை அரிசியில் பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது. தசைப்பிடிப்பு, மூட்டு பலவீனம், முக்கியமாக பக்கவாதம்,குறைந்த இரத்த அழுத்தம், சேர்வு, மலச்சிக்கல், இதய பிரச்சனைகள், பார்வை தொடர்பான பிரச்சினைகள், முடி உதிர்தல் போன்ற பொட்டாசியம், துத்தநாகத்தால் ஏற்படும் இப்பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும், அதன் சத்தை மேம்படுத்தி சமநிலையில் வைப்பதற்காகவும், கருங்குறுவை அரிசி உதவுகிறது.
கருங்குறுவை அரிசியில் குஷ்டத்தையும் விஷக்கடியையும் போக்கும் சக்தி உள்ளது.
மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ளது.
வாதம், பித்தம், கபம் போன்ற உடல் தோஷங்களைச் சமநிலைப்படுத்தும் ஒரே பாரம்பரிய அரிசி வகை கருங்குறுவை அரிசி மட்டுமே.
கருங்குறுவை அரிசி இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த சோகையை நீக்கும்.
இதில், ஜிங்க், விட்டமின் பி5, கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் நல்லது.
இது அதிக நார்ச்சத்து கொண்ட அரிசி என்பதால் செரிமானத்திற்கும் நல்லது. சித்த வைத்தியத்தில் யானைக்கால் வியாதிக்கு லேகியம் தயாரிக்க கருங்குறுவை அரிசி பயன்படுகிறது.
கருங்குறுவை அரிசி புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது. கருங்குறுவை அரிசி சாதத்துடன் மோர் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும். நல்ல உறக்கம் வரும்.
கருங்குருவை அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை சமநிலைப்படும்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, மருத்துவமனை செல்லாமலேயே குணமடையலாம்.