விஞ்ஞான ரீதியாக, கரியோட்டா யூரன்ஸ் என்பது இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பனை குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். கித்துள் பனை, பொதுவாக தனி மீன்வால் பனை, சாகோ பனை, டோடி பனை, வெல்லப் பனை, ஒயின் பனை என்று அழைக்கப்படுகிறது. இளமையாக இருக்கும்போது இதன் பச்சை நிறமானது, முதிர்ச்சியடைந்தவுடன் கருஞ்சிவப்பு சிவப்பு நிறமாக மாறும் இனிப்பு சுவை உடையது.
சுகாதார நலன்கள்: ஆரோக்கியமான செரிமானம், சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்க இது பெரிதும் உதவுகிறது. ஆற்றல் ஊக்கியாக செயல்படும் இது, உடல் எடையை குறைக்க, மலச்சிக்கலை நீக்க, ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த உதவுகிறது. இவை மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும், மூட்டு வலியை குறைக்கவும், மாதவிடாய் வலியை குறைக்கவும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு எனர்ஜி பூஸ்ட்டராகவும் செயல்படுகிறது.
கித்துள் மாவு: கித்துல் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஸ்டார்ச், ‘கித்துள் மாவு’ ஆகும். இது கோடையில் உடல் சூட்டை குறைக்கவும், அமிலத்தன்மையால் வயிற்றுப்புண், வயிற்று நோய்களால் ஏற்படும் தலைவலி போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்த பாரம்பரிய பாட்டி வைத்தியமாக செயல்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே, குடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவுகிறது. கித்துள் மாவைப் பிரித்தெடுப்பது ஒரு கடினமான செயலாகும்.
இலங்கையில் மிகவும் பிரபலமான காலை உணவு கித்துள் மாவு கஞ்சி மற்றும் கித்துள் மாவு புட்டு. கித்துள் பாணி, கித்துள் கருப்பட்டி, கித்துள் மாவு உட்பட, இம்மரம் பயன்களை தந்துகொண்டே இருக்கும். ஓய்ந்த பின் வீட்டுக் கூரைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகின்றது. கித்துள் மரத்தில் இருந்து பெறப்படும் பதனீர் எனப்படும் கித்துள் பாலை குடிப்பது உடல் சூட்டைத் தணிக்கும்.
கித்துள் மரம் பூக்குமானால் ஒரு பசு, கன்று ஈன்றதற்கு சமன் என்று சொல்வார்கள். ஒரு பூ ஒரு வருட காலத்திற்கு மேலாகப் பயன்தரும். கித்துள் மரம் ஏறி பால் எடுக்க முடியாதவர்கள், தமது மரங்களை குத்தகை அடிப்படையில் கொடுத்து, வரும் வருமானத்தில் அரைப் பகுதியை குத்தகைக்காரர்களுக்கு கொடுக்கும் வழமை ஒரு காலத்தில் இருந்துள்ளது.
மலை நாட்டில் அதுவும் தோட்டப் பகுதிகளிலேயே இவை செழித்து வளர்கின்றன. இம்மர இலையின் கிளைகளை வெட்டி உலர்த்திய பின் அதன் இலை மீன்பிடி கம்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. மோனியர்-வில்லியம்ஸின் கூற்றுப்படி, இது சமஸ்கிருதத்தில் மோஹா-கரின் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல காலநிலையில் அலங்கார மரமாக பயிரிடப்படுகிறது. இதன் கூழ் வெயிலில் உலர்த்திய பின் பொடியாக்கும்போதும், இலைகளை சமைக்கும்போதும் உண்ணக்கூடியது.
இத்தாவரத்தின் மஞ்சரியில் இருந்து பெறப்படும் சாற்றையும், தண்டுகளில் இருந்து மாவுச்சத்தைப் பயன்படுத்தி ஜவ்வரிசி சர்க்கரை மற்றும் மதுபானங்களை தயாரிக்கலாம். இருப்பினும், பழம் அதன் ஆக்ஸாலிக் அமிலத்தின் உள்ளடக்கம் காரணமாக சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். விதை மாவு கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. இது இரைப்பை புண்கள், கடுமையான தலைவலி, பாம்புக்கடியால் விஷம் மற்றும் வாத வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுகிறது. இதன் வேர், பல் அசௌகரியங்களுக்கு எதிராகவும், பட்டை மற்றும் விதைகள் கொதிப்புகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது.
உலர்ந்த, கிளைகளற்ற இலைகள் மீன்பிடி கம்பிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. மறுபுறம், இலைத்தளங்கள், துடைப்பங்கள், தூரிகைகள், கயிறுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மிகவும் வலுவான, நேர்த்தியான, மென்மையான மற்றும் நீடித்த இழைகளின் ஆதாரங்களாகும்.