
மருத்துவமனைகளில் நோயாளிகள் அவர்களின் சிகிச்சைகளை மேற்கொள்ளவும்,செயல்படவும் அவர்களுக்கென பிரேத்தேகமான ஒரு சில தனி உரிமைகள் இருக்கின்றன. ஒரு சில நேரங்களில் மருத்துவமனைகளில், நோயாளிகள் தங்களின் சந்தேகங்களை கேட்பதற்கு கூச்சப்பட்டு கொண்டு எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல் திரும்பி வந்து விடுகிறார்கள். ஆனால் அப்படி இனிமேல் யாரும் வர வேண்டாம்! மருத்துவமனையில் நோயாளிகளுக்கு என்று தனிப்பட்ட தனிஉரிமைகள் இருக்கின்றன. அதனை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
•சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவருக்கு ஒப்புதல் அல்லது வழிவகை செய்தல்.
•மருத்துவர்கள், நோயாளிகளுக்கு கண்டிப்பான முறையில் தகுந்த மரியாதையும்,மதிப்பும் தர வேண்டும். இதனை நோயாளி என்ற பெயரில் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
•நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது ரகசியங்களை காக்க செல்வதற்கு உரிமை உண்டு.
•நோயாளிகள் தங்களின் சிகிச்சையை மறுக்கும் உரிமை இருக்கிறது.
• சிகிச்சை அளிக்கும் மருத்துவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை.
•மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல்களை பெறவும், பரிமாறவும் நோயாளிகளுக்கு உரிமை உண்டு.
•நோயாளி தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய சொல்வதற்கு உரிமை உள்ளது.
•மருத்துவரிடம் தனது சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்க உரிமை உள்ளது.
•மருத்துவமனை நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது.
•மருத்துவமனை நிர்வாகத்தின் மேலேயும், தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யாமல் போகும்போது நோயாளிகள் புகார் கூறும் உரிமை உள்ளது.
•மருத்துவ பதிவுகளை பெறவும், அதனைக் கேட்கவும் உரிமையுள்ளது.
•நோயாளிகள் மருத்துவத்திற்காகும் செலவை கேட்கும் உரிமையுள்ளது.
•தங்களின் வசதிக்கேற்ப சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு செல்வதற்கு உரிமை உள்ளது.
•நோயாளிகள் தங்களின் சூழ்நிலைகளை அறிந்து அதனை ஏற்றுக்கொள்ளும் உரிமையுள்ளது.