இந்த ஒரு காய் போதும்! நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன்... அத்தனைக்கும் 'check' வைக்கலாம்!

Benefits OF Kothavarangai
Kothavarangai
Published on

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையைச் சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்பர். இது பல மருத்துவ குணங்களை கொண்டது.

கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப் பொருள் கொத்தவரையில் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

கொத்தவரையில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

இதில் மிகுந்துள்ள சுண்ணாம்பு சத்து எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலியை போக்குகிறது.

இதயத்திற்கு இதமானது. ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள ரத்த ஓட்டம் சீராவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவுவதுடன் இரைப்பையில் தங்கி புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது.

மன உளைச்சல், படபடப்பை போக்கிட உதவுகிறது. ஆசன வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கொத்தவரங்காய் போலவே அதன் இலைக்கும் மருத்துவ குணம் உள்ளது.

இலைகள் ஆஸ்த்துமா நோயை கட்டுப்படுத்தும். வலி நிவாரணியாக, கிருமி நாசினியாகவும் இதன் இலை செயல்படுகிறது. ஒரு கைப்பிடி அளவு இலையுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க ஆஸ்துமா இருமல், மூச்சிரைப்பு குணமாகும்.

இதையும் படியுங்கள்:
மனிதனுக்கு மனநலனும் முக்கியம்தான்!
Benefits OF Kothavarangai

மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும். கொத்தவரை இலை, கறிவேப்பிலை, மஞ்சள் கரிசிலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

கொத்தவரை விதையை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க உடலில் ஏற்பட்ட வீக்கங்கள் குறையும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும் சக்தி கொத்தவரங்காய்க்கு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க அவர்களது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல்நலம் மேம்படும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com