
பூங்கார் அரிசியில் வைட்டமின் ஏ, துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி1, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடன்ட், தயாமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த அரிசியில் வைட்டமின் பி1 இருப்பதால் வயிற்று புண் காரணமாக வரும் அல்சரை குணப்படுத்த உதவுகிறது.
குழந்தைகளுக்கு இந்த அரிசியை உணவில் கொடுப்பதன் மூலம், செரிமான பிரச்சனைகளை தடுக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கவும் உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் ஆறு மாத காலங்களுக்கு பிறகு இந்த பூங்கார் அரிசியை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் சுகப்பிரசவத்துக்கு துணையாக இருக்கும்.
மகப்பேறு அடைவதற்கும் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது.
எனவே பூங்கார் அரிசிக்கு கர்ப்பிணி பெண்கள் அரிசி எனும் பெயரும் உண்டு.
பூங்கார் அரிசி ஹார்மோன் அளவை பராமரிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. இதனால் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று நம்பப்படுகிறது.
பூங்கார் அரிசி மற்ற அரிசிகளை காட்டிலும் நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் இவை எளிதில் ஜீரணமாகும். மேலும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
பூப்பெய்திய சிறுமிகளுக்கு பூங்கார் அரிசியில் புட்டு செய்து சாப்பிடக் கொடுத்து வர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.
பூங்கார் அரிசி, செலியாக் நோயிலிருந்து மீளவும், நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
பரம்பரை நோய்களின் தாக்கம் நமது உடலில் இருந்து குறைய அல்லது வராமல் செய்ய பூங்கார் அரிசி உதவுகிறது.
மற்ற அரிசிகளை விட பூங்கார் அரிசியில் சற்று அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. எனவே இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ரத்த சோகை நோயாளிகளுக்கு இந்த அரிசி அருமருந்து.