குருவிக்கார் அரிசி, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய அரிசி வகை. இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகையைத் தடுக்கவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள், இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை மீண்டும் பெறலாம். நீரிழிவு நோயின் தாக்கமும் குறையும்.
குருவிக்கார் அரிசி, ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
குருவிக்கார் அரிசியில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால், எலும்பு மற்றும் பற்களின் உறுதி தன்மையை அதிகரிக்கிறது.
இது மெதுவாக ஜீரணம் ஆவதால், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை குறைய உதவும்.
கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம்.
குருவிக்கார் அரிசியில் துத்தநாகம், இரும்புச் சத்து போன்றவை அதிகளவில் உள்ளதால், இதை குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு அதன் செயல்திறனையும் அதிகரிக்கும்.
குருவிக்கார் அரிசி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
நோயளிகளுக்கு குருவிக்கார் அரிசியைக் கஞ்சி வைத்துக் குடிக்கக் கொடுத்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து விரைவில் குணமடைவார்கள்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)