அன்றாட உணவின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்!

diabetes
diabetes
Updated on

சர்க்கரை நோய் என்பது அதிகளவிலான மக்களின் உடலில் சரிசெய்ய முடியா ஒரு நோயாக பார்க்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில், சர்க்கரை நோயாளிகளில் ஏராளமானோர் தினம் தினம் மருந்துகளோடும் மாத்திரைகளோடும் இந்த  நோயை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் இதற்கான தீர்வு நாம் அன்றாடம் உண்ணக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களிலே கொட்டிக்கிடக்கின்றது. சர்க்கரை நோயைக் எளிதாகக்  கட்டுப்படுத்தும் காய்கறி மற்றும் பழவகைகள் குறித்து பார்ப்போம் வாங்க...

பழங்கள்:

பொதுவாகவே பழங்கள் என்பது நாம் அனைவரும் கட்டாயம் உண்ணவேண்டிய ஒன்றாகும். பழங்களில் பல வகைகள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும். அந்த வகையில் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி  தினமும் ஏதோ ஒருவகையான பழத்தை கட்டாயமாக சாப்பிட்டு வந்தால் நமக்கு பிணி ஏதும் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. 

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான சக்தி ஒரு சில பழவகைகளுக்கு உண்டு.

naval palam-nellikai-berikai
naval palam-nellikai-berikai

1. நாவல்பழம்

இராமாயணத்தில் ராமர் தனது 14 ஆண்டுகால வனவாசத்தின் போது இந்த பழத்தை உண்டு தான் வாழ்ந்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. இப்பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாகப்  பயன்படுத்துவதுண்டு. அதிலும் மிக மிக முக்கியமாக, சர்க்கரை நோயாளிகளுக்கான பிரேத்தியேக பழம் என்றுகூட இதைச் சொல்லலாம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுப்படுத்தும்.

இந்த பலத்தின் விதையை பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயின் அளவை நாம் கட்டுக்கொள் கொண்டுவரலாம்.

2. நெல்லிக்காய்:

நெல்லிக்காயின் தன்மை மற்றும் சத்து நம்முடைய ஆயுளை நீட்டிக்கும். இது பல நோயை தீர்க்கும் ஒரு அருமையான பழமாகும். ஏனென்றால் இந்த பலத்தில் வைட்டமின் சி மற்றும் நார்சத்து நிறைந்திருக்கின்றன. எனவே இதனை தினமும் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமின்றி இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

3. பேரிக்காய்:

பேரிக்காய் என்பது ஆப்பிள் வகையைச் சேர்ந்த ஒரு பழ வகையாகும். ஆனால் ஆப்பிளோடு ஒப்பிடுகையில் பேரிக்காயில் இருக்கும் சத்துக்கள் தான் அதிகம். பேரிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்திருக்கின்றன. மேலும் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் பசியின்மை மற்றும் ஜீரணம் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்யும். இந்த சத்து நிறைந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் காலை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வது நல்லது.

எனவே இதனை தினமும் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு நார்ச்சத்து தரும் ஆரோக்கிய நன்மைகளை அறிவோம்!
diabetes
carrot-broccoli-cucumber
carrot-broccoli-cucumber

காய்கறிகள் மற்றும் கீரை வகைகள்:

1. கேரட்:

கேரட்டில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால்  பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை இதில் நிறைந்திருக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த கேரட்டை உட்கொள்வது சர்க்கரை நோயைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

2. ப்ரோக்கோலி:

இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ப்ரோக்கோலியை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கட்டாயமாக தங்களின் உணவோடு சேர்ப்பது அவசியமாகும். ப்ரோக்கோலியை நீங்கள் வறுத்தோ அல்லது சூப்களிலோ சேர்த்து சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

3. வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் அதிகளவிலான நீர்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதனை  சர்க்கரை நோயாளிகள் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் அல்லது கட்டுப்படுத்தவும் முடியும். இந்த வெள்ளரிக்காயை நீங்கள் பச்சையாகவோ அல்லது சாலட்களில் சேர்த்தோ சாப்பிடலாம்.

4. வெண்டைக்காய்:

வெண்டைக்காய் என்பது அனைவரும் கட்டாயம் உண்ணவேண்டிய ஒரு காய்கறி வகையாகும். இதில் பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, போலிக் அமிலம், நார்ச் சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாதாரணமாக நம்முடைய அன்றாட உணவோடு எடுத்துக்கொள்வது சர்க்கரை நோயை மட்டுமின்றி நம்முடைய உடலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அதோடு மற்ற காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்து சாப்பிடுவது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com