உடலில் இரண்டாம் இதயம் எங்கே இருக்கிறது தெரியுமா?

Cramps
Cramps
Published on

கால் முட்டிக்கு கீழ் பின் பகுதியில் உள்ள தடிமனான கெண்டைக்கால் என்று அழைக்கப்படும் பகுதியில் தசைகள் எதிர்பாராமல் இழுத்து பிடிக்கும்.

சில நேரங்களில் இரவில் உறங்கும் சமயத்தில் நரம்புகள் இழுத்துப் பிடிக்கும். இயல்பாவதற்கு இரண்டு, மூன்று நிமிடங்கள் ஆகலாம். ஏதோ ஒரு சமயத்தில் நாம் அனைவரும் இந்த வலியை உணர்ந்து இருப்போம். பொதுவாக 40 வயதிற்கு மேல் தான் கெண்டைக்கால் தசைப் பிடிப்பு வரும். ஆனால் 12 வயது குழந்தைக்கு தசைப் பிடிப்பு இருந்தால் அதற்கு பிரதான காரணம் நீர்ச்சத்து குறைபாடாக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வியர்க்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கான காரணமாகும்.

இவை தவிர வயிற்றுப்போக்கு பிரச்னை, மாதவிடாய் சமயத்தில் அதிக நீர், இரத்த இழப்பு இருந்தால் கெண்டைக்கால் தசைப் பிடிப்பு வரும். கர்ப்ப காலத்தில் அதிக வாந்தி எடுப்பது, 40 வயதிற்கு மேல் அதிக உடல் எடை, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வது ஆகியவையும் இதற்கு காரணமாகும்.

இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கால்களை நீட்டி மடக்குவது, உட்கார்ந்த நிலையில் கால்களை முன்பக்கமாக நீட்டி பாதங்களை மேல் கீழ் பக்கவாட்டில் வட்ட வடிவமாக சுற்றுவது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

உடல் பருமனாக இருந்தால் கால்களை மடக்கி நீட்டும் போது தசைகள் பிடித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எனவே இவர்கள் நிதானமாக பயிற்சி செய்யலாம்.

உடலில் நீர்ச்சத்து குறையும் போது ரத்தத்தில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் குறையும். எலும்புகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தசைநார்கள் இந்த மூன்று தாதுக்களும் குறையும் போது அதன் வேலைகளை சரியாக செய்ய முடியாமல் அசைவின்றி அப்படியே நிற்கும்.

கெண்டைக்காலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான் இதய ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இந்த தாதுக்கள் போதிய அளவில் இல்லாவிட்டால் இதய தசைகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். மார்பு பகுதியில் இருந்து இழுத்துப் பிடித்து வலிக்கும். அதனால் தான் கெண்டைக்காலை இரண்டாம் இதயம் என சொல்கிறோம். நுனி விரலில் நிற்பது, நடப்பது, உடற்பயிற்சி செய்வது என கெண்டைக்கால் தசைகளுக்கு பயிற்சி தேவை.

இதையும் படியுங்கள்:
தீரா வலி தரும் தசை பிடிப்பு... இதுவும் ஒரு காரணம்!
Cramps

மேற்கண்ட பயிற்சிகளுடன் இந்த தாதுக்களும் சரியான அளவில் இருப்பது அவசியம். இந்த குறைபாட்டிற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் மூன்று தாதுக்களும் இணைந்த மருந்துகள் உள்ளன. இவை பிரச்சனையிலிருந்து எளிதாக குணமாக உதவும். அவ்வப்போது கால்களுக்கும் சிறிய உடற்பயிற்சி தேவைப்படுகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com