வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் பக்க விளைவுகள் இல்லா மருந்துகள்!

மருந்துக்கடைகளில் தேடுவதை விட, நம் அன்றாட பழக்கவழக்கங்களிலும் மனப்பக்குவத்திலும் தான் உண்மையான ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது என்பதை இந்த வரிகள் அழகாக விளக்குகின்றன.
Life lessons
Life lessons
Updated on

ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது - ஒரு மருந்து

சீக்கிரம் தூங்குவதும் அதிகாலையில் எழுவதும் - ஒரு மருந்து

காலை கடவுளை நினைவு கூறுவது - ஒரு மருந்து

யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சி ஆகியவை - ஒரு மருந்து

காலை, மாலை, நடை பயிற்சி - ஒரு மருந்து

நோன்பு எல்லா நோய்களுக்கும் - ஒரு மருந்து

சூரிய ஒளியும் - ஒரு மருந்துதான்

மண்பானை நீரை குடிப்பதும் - ஒரு மருந்துதான்

கை தட்டுவதும் - ஒரு மருந்து தான்

நன்றாக மென்று சாப்பிடுவதும் - ஒரு மருந்து தான்

தண்ணீர் குடிப்பதும் மனதளவில் சாப்பிடுவதும் - மருந்துகள் தான்

சாப்பிட்ட பின் வஜ்ராசனத்தில் அமர்வதும் - மருந்து தான்

மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது - ஒரு மருந்து

சில நேரங்களில் மௌனமே - அருமருந்து

குடும்பத்தாருடன் சிரிப்பும் நகைச்சுவையும் - ஒரு மருந்து

மன நிறைவே - ஒரு மருந்து

மனதுக்கும் உடலுக்கும் அமைதியே - மருந்து

நேர்மையும், நேர் மறையும் - மருந்துகள் தான்

தன்னலமற்ற அன்பும் உணர்ச்சிகளும் - மருந்துகள் தான்

பிறருக்கு நன்மை செய்வதே - மருந்துதான்.

அறம் தரும் ஒன்றை செய்வதும் - மருந்து தான்

பிறரிடம் இணக்கமாக வாழ்வேதே - மருந்து தான்

உண்பதும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் - மருந்து தான்

பிசியாகவும், ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதே - ஒரு மருந்து தான்!

இந்த மருந்துகள் அனைத்தும் எந்த பக்கம் விளைவுகளும் இல்லாமல் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கிடைப்பது - நல்ல மருந்து தான்!

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Life lessons

இதனை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தால் எந்த மருந்து கடைகளுக்கும் செல்ல வேண்டியது இல்லை!

logo
Kalki Online
kalkionline.com