கல்லீரலை சுத்தப்படுத்தும் சூப்பர் உணவுகள்!

Liver Cleansing Foods!
Liver Cleansing Foods!

நமது உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். எனவே அதன் ஆரோக்கியத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. நமது உடலில் இரும்புச் சத்து, கொழுப்பு, சர்க்கரை போன்றவற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு. குறிப்பாக உடலுக்குத் தேவையான புரதத்தை உற்பத்தி செய்வதிலும் உதவி செய்கிறது. எனவே கல்லீரலை நாம் பாதுகாப்பது அவசியம். கல்லீரலை சுத்தம் செய்ய நீங்கள் சில உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். அவை கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

பூண்டு: கல்லீரல் நச்சுக்களை நீக்குவதில் பூண்டு முதலிடம் வகிக்கிறது. இதில் அசலின் மற்றும் செலினியம் போன்ற ரசாயனங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அழுக்குகளை அகற்றுகிறது. மேலும் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் பெருமளவு கட்டுப்படுத்தி கல்லீரலை தூய்மையாக வைத்திருக்கிறது. எனவே கல்லீரலை சுத்தப்படுத்த நினைப்பவர்கள் தினமும் பூண்டு பற்களை சாப்பிடுங்கள்.

கீரைகள்: பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை உட்கொள்வதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது. கல்லீரலை சுத்தம் செய்ய பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

ஆப்பிள் சைடர் வினிகர்: நாம் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் வெண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு ஸ்பூன் வினிகரை வெந்நீர் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும். அதே நேரம் ஆப்பிள் சைடர் வினிகர் அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள்!
Liver Cleansing Foods!

வெண்ணை பழம்: கல்லீரலில் உள்ள தேவையற்ற விஷயங்களை நீக்க அவகாடோ எனப்படும் வெண்ணைப் பழத்தை சாப்பிடுங்கள். அதில் உள்ள விட்டமின்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் உடலுக்குத் தேவையான கொழுப்புகளும் உள்ளது. அது கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை நீக்க உதவும். 

மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை நீங்கள் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும்போது, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும் இந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com