முடி உதிர்வா? அது சாதாரணமல்ல... பெண்களை தாக்கும் லூபஸ் எச்சரிக்கை!

முடி உதிர்வு, மூட்டு வலி, சிறுநீரக பாதிப்பு முதல் மனஅழுத்தம் வரை பல உறுப்புகளை தாக்கும் லூபஸ் நோயின் மறைந்துள்ள அபாயங்களை அறிந்துகொள்ளுங்கள்.
Lupus Disease - Symptoms and Treatment
Lupus Disease - Symptoms and TreatmentImage credit: AI Image
Updated on

லூபஸ் நோய் (Lupus Disease) இளம்பெண்களை அதிகம் பாதித்து வருகிறது. ஆண்களுக்கு இந்த நோய் அரிதாகவே காணப்படும். லூபஸ் நோய் அறிகுறிகள் என எடுத்துக்கொண்டால் முடி உதிர்வது, காய்ச்சல், படபடப்பு, வாயின் மேற்பகுதிகள் புண் வருவது, சருமம் சிவந்து போவது, கன்னத்தில் தடிப்பு போன்றவை ஆகும்.

இந்த நோய் சர்க்கரை நோய் போன்று எல்லா உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயில் நீண்ட நாட்கள் கழித்து சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த நோயில் முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகம்தான். சில பெண்களுக்கு வலிப்பு ஏற்படும்.

மன பாதிப்பு, மன குழப்பம் ஏற்படலாம். பகலில் தூக்கம் வரும்; ஆனால் இரவில் தூக்கம் வராது; இவை இவற்றின் அறிகுறிகள் என சொல்லலாம்.

இளம் பெண்களுக்கு மூட்டு வலி வரலாம். மிக அதிகமாக இருபது முதல் 40 வயதிற்குள் தான் இந்த நோய் பாதிப்பு தெரியும். இதனை 'பல்லுறுப்பு சிதைவு நோய்' என்று கூறுவார்கள்.

மரபியல் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை தான் இதற்கு பிரதான காரணம். லூபஸ் நோய் வரும் வாய்ப்பு இருந்தால், சூரிய ஒளி சருமத்தில் படும்போது அதிலிருந்து வரும் புற ஊதா கதிர்களால் சில வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு எதிர்ப்பு செல்கள் உருவாகும் அவை நம் உடல் செல்களை அழிக்க துவங்கும்.

லுபஸ் பாதிப்பின் தன்மை நபருக்கு நபர் மாறும். சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்படக் கூடும். மாதவிடாய் நின்ற பின் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பி குறைவாக இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையலாம். முறையான பரிசோதனை செய்து லூபஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கு தகுந்தபடி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் மருந்துகளை நிறுத்தினால் மீண்டும் இந்த நோய் வரக்கூடிய ஆபத்து உள்ளது.

லூபஸ் நோய் பாதிப்பு உள்ளவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் போகக்கூடாது.

டியூப் லைட், மொபைல் போன் வெளிச்சம், எல்.இ.டி விளக்குகள் போன்றவற்றில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் தன் உடல் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உஷார்: தலையணைக்கு அடியில் மொபைல் போன் வைக்கிறீர்களா?
Lupus Disease - Symptoms and Treatment

மருந்து சாப்பிட்டால் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

லூபஸ் நோய் பாதித்தவர்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு நல்ல முறையில் இருக்கிறார்கள்.

கர்ப்பம் தரிக்கவும் குழந்தை பெறவும் பல லூபஸ் பெண்களுக்கு முடியும்; ஆனால் மருத்துவர் கண்காணிப்பு அவசியம்.

தற்போது உள்ள மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து லூபஸ் நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

வெள்ளை அணுக்களில் பி செல் என்று ஒரு வகை உண்டு. இவை தான் லூபஸ் பாதிப்பிற்கு முக்கிய காரணம்.

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள அணி ப்ரோ லுமாப் என்ற மருந்து வெள்ளை அணுக்களில் உள்ள பி செல்களை மட்டும் குறி வைத்து அழிக்கிறது. இந்த மருந்துகள் மருத்துவர் கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல் இந்த மருந்தை டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் விலை சற்று அதிகம் தான் நாளடைவில் குறைய வாய்ப்பு உள்ளது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com