கைகளில் வீக்கமா? உடனே கவனிக்க வேண்டிய நிணநீர் வீக்கம் - காரணங்கள் மற்றும் எளிய தீர்வுகள்!

ஆபத்தான நிணநீர் வீக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணமாக்குவது எப்படி? முழுமையான வழிகாட்டி!
Lymphedema | நிணநீர் வீக்கம்
Lymphedema | நிணநீர் வீக்கம்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நிணநீர் வீக்கம் (Lymphedema அல்லது Lymph Nodes) என்பது உடலின் திசுக்களில் நிணநீர் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கமாகும். இது பொதுவாக கைகள், கால்கள் அல்லது கழுத்து போன்ற பகுதிகளில் நிணநீர் திரவம் தேங்குவதால் அல்லது நோய்த்தொற்று காரணமாக திசுக்கள் வீங்கும் நிலையாகும்.

நிணநீர் வீக்கம் அறிகுறிகள்: 

  • கை அல்லது கால்களில் ஏற்படும் தொடர் வீக்கம். 

  • அந்தப் பகுதிகளில் கனத்த உணர்வு அல்லது இறுக்கம் ஏற்படுதல். 

  • தோல் தடிமனாதல் அல்லது விறைப்புத் தன்மை. 

  • கழுத்து, அக்குள், தாடைக்குக் கீழே அல்லது இடுப்புப் பகுதிகளில் பட்டாணி அல்லது பீன்ஸ் அளவில் சிறிய மென்மையான கட்டிகள் அல்லது புடைப்புகள் தோன்றும். வீங்கியப் பகுதியைத் தொடும் பொழுது இந்த சிறிய கட்டிகளில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படும். 

  • சளி, இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு அல்லது காய்ச்சல் போன்ற தொற்றின் அறிகுறிகள் தென்படும்.

நிணநீர் வீக்கம் காரணங்கள்: 

  • நிணநீர் நாளங்கள் அல்லது முனைகளில் ஏற்படும் பாதிப்பு அல்லது அடைப்பு. 

  • புற்றுநோய் சிகிச்சையின் போது  நிணநீர் கணுக்கள் நீக்கப்படுதல் அல்லது சேதமடைதல் மற்றும் கதிர்வீச்சு செய்வது நீரோட்டத்தைத் தடுத்து வீக்கத்தை ஏற்படுத்தும்.

  • காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைகளால் நிணநீர் நாளங்களில் ஏற்படும் அடைப்பு பாக்டீரியா, வைரஸ் அல்லது காசநோய் போன்ற கிருமித் தொற்றுகளால் நோய் எதிர்ப்பு செல்கள் போராடும் பொழுது கணுக்கள் வீங்கும். 

  • மரபணுக் காரணங்களால் நிணநீர் நாளங்கள் சரியாக வளர்ச்சி அடையாமல் போவது முதன்மை நிணநீர் வீக்கத்தை உருவாக்கும்.

  • வாதம் போன்ற நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகள்.

Lymphedema | நிணநீர் வீக்கம்
Lymphedema | நிணநீர் வீக்கம்

நிணநீர் வீக்கம் சிகிச்சைகள்: 

வீக்கம் மற்றும் வலி 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தாலோ, கல் போல் கடினமாகவோ அல்லது அசையாமல் இறுக்கமாகவோ இருந்தாலோ, காரணம் இன்றி உடல் எடை குறைந்தாலும், காய்ச்சல் இருந்தாலோ, அதிக இரவு வியர்வை இருந்தாலோ உடனடியாக மருத்துவரை பார்த்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வீக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சைகளை பரிந்துரைக்கின்றனர். நிணநீர் வீக்கத்திற்கான முக்கிய சிகிச்சை முறைகளில் கைமுறை நிணநீர் வடிகால் சிகிச்சை, அழுத்த சிகிச்சை மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவை அடங்கும்.

வடிகால் சிகிச்சை:

நிணநீர் ஓட்டத்தைத் தூண்டுவதற்குச் செய்யப்படும் கைமுறை நிணநீர் வடிகால் சிறப்பு மசாஜ் முறை இது. மென்மையான நிணநீர் வடிகால் மசாஜ் (Manual Lymphatic Drainage) மூலம் தேங்கியுள்ள திரவம் வெளியேற்றப்படும்.

அழுத்த சிகிச்சை:

  • வீக்கத்தைக் கட்டுப்படுத்த, குறைக்க பல அடுக்கு சுருக்கக் கட்டுகள் அல்லது இறுக்கமான பிரத்யேக ஸ்லீவ் அல்லது சாக்ஸ் அணிதல் போன்ற அழுத்தக்கட்டுகள் (Compression bandages) அல்லது அழுத்த ஆடைகளை அணிவது போன்ற சிகிச்சை பலனளிக்கும்.

  • தொற்றுகளுக்கு உரிய கிருமிநாசினி அல்லது ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளுதல்.

  • லேசான உடற்பயிற்சிகள் மூலம் நிணநீர் ஓட்டத்தை மேம்படுத்துதல். சிறப்பான உடற்பயிற்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை (கை, கால்களை) உயரமாக வைத்திருத்தல்.

  • தீவிரமான மற்றும் கடுமையான நிலைகளில் நிணநீர் நாளங்களை இணைக்கச் செய்யும் சிறப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
பச்சைத் தண்ணீரா? வெந்நீரா? ஆரோக்கியத்திற்கு எந்த குளியல் சிறந்தது?
Lymphedema | நிணநீர் வீக்கம்
  • நிணநீர் கட்டி (வீங்கிய நிணநீர் கணுக்கள்) குணமாக சூடான ஒத்தடம், பூண்டு மற்றும் மஞ்சள் போன்ற எளிய வீட்டு வைத்தியங்களைச் செய்யலாம். இவை வீக்கத்தை குறைக்கவும் வலியைப் போக்கவும் உதவும்.

  • வெதுவெதுப்பான நீரில் சுத்தமான துணியை நனைத்து வீக்கம் உள்ள இடத்தில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

  • சிறிதளவு மஞ்சள் தூளுடன் தேன் கலந்து சாப்பிட வீக்கத்தைக் குறைக்க உதவும்.

  • பச்சையாக ஓரிரு பூண்டு பற்கள் சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்க்கலாம். இவை கிருமி தொற்றை எதிர்த்து போராடும்.

  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வெதுவெதுப்பான நீரை அடிக்கடி குடிக்கலாம்.

  • இஞ்சித் தேநீர் குடிப்பது ரத்த ஓட்டத்தை சீராக்கி வீக்கத்தைக் குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
பள்ளிக் குழந்தைகளில் நான்கில் ஒருவருக்கு Pre Diabetes - பெற்றோர்களே உஷார்!
Lymphedema | நிணநீர் வீக்கம்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com