எச்சரிக்கை: இந்த வைரஸ் தாக்கினால் கண்ணிலிருந்து ரத்தம் பீச்சி அடிக்குமாம்! 

Marburg Virus
Marburg Virus
Published on

உலகம் அவ்வப்போது கொரோனா ஆபத்தான வைரஸ்களின் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில், மார்பர்க் (Marburg) என்ற ஒரு கொடிய வைரஸ், குறிப்பாக ஆப்பிரிக்காவில் பரவி வருவது உலக சுகாதார அமைப்பின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வைரஸ் கண்களில் இரத்தக் கசிவை ஏற்படுத்தி கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கி மரணத்தைக்கூட விளைவிக்கும் திறன் கொண்டதாகும்.

மார்பர்க் வைரஸின் தோற்றம் மற்றும் வரலாறு:

மார்பர்க் வைரஸ் முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மார்பர்க் மற்றும் பிராங்பேர்ட் மற்றும் செர்பியாவின் பெல்கிரேட் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் ஆய்வகப் பணியாளர்களிடையே இந்த வைரஸ் பரவியது. இந்த வைரஸ் எபோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. 2005 ஆம் ஆண்டில் இந்த தொற்றால் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கோலாவில் உயிரிழந்தனர். 

இந்த மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது 88% வரை மரண விகிதத்தைக் கொண்டுள்ளது. வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ், மனிதர்களிடையே நேரடித் தொடர்பு மூலமாகவும் பரவும். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம், உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுகிறது.

ஆரம்ப அறிகுறிகள்:

மார்பர்க் வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் மற்ற நோய்களைப் போலவே இருப்பதால், ஆரம்பத்தில் கண்டறிவது கடினம். இருப்பினும், சில பொதுவான அறிகுறிகள் ஏற்படும். திடீரென அதிக காய்ச்சல் உண்டாவது மார்பர்க் வைரஸின் முக்கிய அறிகுறியாகும். தாங்க முடியாத தலைவலி இந்த வைரஸின் மற்றொரு அறிகுறி.

உடல் முழுவதும் வலி மற்றும் சோர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்பை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கும். தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு தோலில் அரிப்பு ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
10 அடி நீள தந்த மூக்கு கொண்ட அரிய வகை நார்வால் திமிங்கலத்தின் சிறப்புகள்!
Marburg Virus

தொற்று தீவிரமானால், மூக்கு, ஈறுகள், கண்கள் மற்றும் பிற துளைகளில் இரத்தக்கசிவு ஏற்படலாம். குறிப்பாக கண்களில் இரத்தக் கசிவு ஏற்படுவது இந்த வைரஸின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். மோசமான சந்தர்ப்பங்களில், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தும்.

தடுப்பு நடவடிக்கைகள்:

இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், ஆரம்ப கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து மருத்துவ உதவியை நாடுவது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

வௌவால்கள் மற்றும் காட்டு விலங்குகளுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குகைகள் மற்றும் சுரங்கங்களில் வசிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்பவர்கள் கையுறைகள், முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சுறுசுறுப்பு தரும் 10 உணவுகள்!
Marburg Virus

மார்பர்க் வைரஸின் ஆபத்தை உணர்ந்து, உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சுகாதார நிறுவனங்கள் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களும் வைரஸ் குறித்த விழிப்புணர்வுடன் இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com