

ஆணும், பெண்ணும் சமமானவர்கள் என்றாலும் அவர்களது உடல் அமைப்பிலும் உடலில் செயல்பாடுகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளிலும் எதிர்கொலிக்கும். ஒரு பாலினத்திற்கு நன்மை பயக்கும் உணவு மற்ற பாலினத்திற்கு அதே நன்மைகளை கொடுக்காமல் போகலாம். எனவே ஆண்களும் பெண்களும் அவர்களது உடலின் தேவைகளை பொறுத்து சரியான உணவுகளை உட்கொள்வது அவசியம்.
ஹார்மோன் வேறுபாடுகள்:
பொதுவாக ஆண்களுக்கு பெண்களை விட அதிக கலோரிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில் அவர்கள் அதிக தசை நிறையையும், பெரிய உடல் அமைப்பையும் கொண்டுள்ளனர். மேலும் ஆண்களின் வளர்ச்சிதை மாற்ற விகிதமும் அதிகம்.
மாதவிடாய் சுழற்சி காரணமாக பெண்களுக்கு ஆண்களை விட அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பால் இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் பெண்களுக்கு அதிகம். எனவே ஆண்களை விட பெண்கள் இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
எலும்பு ஆரோக்கியத்தை பொருத்தவரை பெண்களுக்கு கால்சியம் மிகவும் முக்கியம். குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு எலும்பு அடர்த்தி குறையும் அபாயம் பெண்களுக்கு எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
மேலும் டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஆண் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண் ஹார்மோன்கள் ஊட்டச்சத்துத் தேவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இதன் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் உணவு உட்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து தேவைகள்:
தசை வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அவசியம். ஆண்களுக்கு தசைநிறை அதிகம் இருப்பதால் அவர்களுக்கு பெண்களை விட அதிக புரதம் தேவைப்படலாம். மேலும், வைட்டமின் D, வைட்டமின் B12, ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெவ்வேறு அளவில் தேவைப்படலாம்.
வாழ்க்கை முறை வேறுபாடுகள்:
ஆண்களில் பலர் பெண்களை விட அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களுக்கு அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும்.
மன அழுத்தம் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் பயன்பாட்டைப் பாதிக்கலாம். ஆண்கள், பெண்கள் மன அழுத்தத்தை வெவ்வேறு விதமாக கையாள்கின்றனர். எனவே, இதன் காரணமாகவும் உணவு தேவைகள் மாறுபடும்.
உணவுப் பழக்கவழக்கங்கள், உணவு கிடைக்கும் தன்மை போன்ற காரணிகளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்கொள்ளும் உணவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட காரணங்களால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வெவ்வேறு ஊட்டச்சத்து தேவைகளைக் கொண்டுள்ளனர். இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு, தகுந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் அனைவருமே ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.